உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

233

விழைந்த துறவொழுக்கத்தில் அவளை நிலைப்பித்தற்குத் தம்மால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவுஞ்

சொல்லி, அவளதுள்ளத்திற் காரணமின்றியே உண்டான அச்சங்களையுங் கலக்கத்தையும் ஒழித்திட்டார். அவள் துறவுநிலையை மேற்கொண்டபின் அவட்குந் தாங் கூற வேண்டும் அறிவுரைகளை அவ்வப்போது கூறி வருவ தாகவும் உறுதிமொழி புகன்றார். கடைப்படியாக அவர் அவளை நோக்கிக் கூறியதாவது, “நங்காய்! நாம் கைக் கொண்ட இத்துறவு நடையின் முறைப்படி, யான் நின்னை அடிக்கடி பார்த்துப் பேசுதல் ஆகாது. ஆனாலும், யான் றைவனை வழுத்தும் நேரங்களில் நினக்கும் அவன் தனதருளை வழங்குமாறு வேண்டுவேனென்றும், நீ நடந்து காள்ளவேண்டு முறைகளை அடுத்தடுத்துக் கடிதவாயிலாக உனக்கு அறிவித்து வருவேனென்றும் நீ திண்ணமாய் நம்பியிரு. நீ மேற்கொள்ளத் தீர்மானித்த விழுத்தகு நிலையைக் களிப்புடன் கடைப்பிடித்திரு; நீ உலகத்தில் வேறெந்த வகையிலும் அடையமுடியாத ஒரு மனவமைதி யையும் மன நிறைவையும் நீ அதனால் விரைவில் அடை வாய்!”

.

அங்ஙனம் அப்பன் பிராஞ்சு எடுத்துரைத்த அருண் மொழிகள், கானத்தோகையின் உள்ளத்தைக் கிளர்ச்சி பெறச்செய்தன; ஆகவே, அவள் மற்றைநாட் காலையிலேயே துறவு நிலையை மேற்கொண்டாள். அவள் அந்நிலையை அடைதற்குச் செய்த தவவினைகள் நடந்தேறிய பின், அவள் அக் கன்னிமாடத்தில் தனக்கென வகுக்கப்பட்ட ஒரு த தனி யறையுட் சென்று தனியிருந்து நோற்கலானாள்.

புதிது துறவு புகுந்த இம்மாதர்க்கும் அப்பன் பிராஞ்சுக்கும் இடையே நிகழ்ந்த செய்தி முற்றும் அக்கன்னி மாடத்தின் தலைவியாரான துறவம்மையார்க்கு அறிவிக்கப் பட்டது. அடுத்த நாளில் அத்தலைவியார் அப்பன் பிராஞ்சு எழுதிய கடிதம் ஒன்றைக் கானத்தோகையின் கையிற் கொடுத்தனர். அதனை அவள் பிரித்துப்பார்க்க, அதிற் பின்வருமாறு வரையப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/265&oldid=1585521" இலிருந்து மீள்விக்கப்பட்டது