உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

  • மறைமலையம் -18

.

“நங்காய், நீ இப்போது புகுந்திருக்குந் துறவு நிலையில் நீ அடைய இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் முதற் பயனாக யான் உனக்கு அறிவித்துக்கொள்வது யாதென்றால், இறந்துபோனானென்று நீ நினைந்து மிகவுந் துயர்கூருந் தவமணி யென்பான் அங்ஙனம் இறந்து போகாமல் ன்னும் உயிரோடிருக்கின்றான் என்பதேயாம். நீ நின்மனத்திலுள்ளதை எந்த முனிவர்க்குத் திறந்து சொல்லினையோ, அவரே நீ நினைந்தழும் அந்தத் தேவ மணியாக முன்னொருகால் இருந்தனர். நாம் ஒருவரை யொருவர் காதலித்த காதலானது, காதற்கூட்டங் கைகூடி யிருந்தாற் பயக்கும் மகிழ்ச்சியைவிட, அதுகைகூடாமற் போனதனாற் சாலச்சிறந்த மகிழ்ச்சிகளைப் பயவாநிற்கின்றது. நாம் விழைந்தவாறே நிகழாதொழியினும், இறைவன்றிருவரு ளானது நமது நன்மைக்காகவே நம்மை இந்நிலையில் நிற்பித்தது. நின் காதலன் தேவமணி இறந்துபோனதாகவே நீ ப்போதும் எண்ணிக்கொள். ஆயினும், நின் பொருட்டு றைவனை வேண்டுதலில் வழுவாத அப்பன்பிராஞ்சு என்பான் ஒருவன் உளன் என்பதில் உறுதியாய் பிராஞ்சு

99

ரு.

இக்கடிதத்தின் கையெழுத்தும் அதில் அடங்கிய செய்தியும் ஒத்திருத்தலைக் கானத்தோகை கண்டுகொண் டாள். தான் தன்னுள்ளத் துள்ளதைத் திறந்துசொல்லி யக்கால், அம்முனிவர் ஆறுதலுரை பகர்ந்த குரல் ஒலியும், அவர் அப்போதடைந்த பெருந்துயரும், அவருடைய மற்றை நடைகளும் அவர்தாம் தான் காதலித்த தேவமணி யென் பதனை அவட்கு நன்கறிவித்தன. அதனால், அவள் இன்பக் கண்ணீர் வடித்தழுதபின், "என் தேவமணி இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதே எனக்குப்போதும். இனி, நான் மனவமைதியுடனும் உவகையுடனும் என் காலத்தைக் கழிப்பேன்" எனத் தனக்குள் தீர்மானஞ் செய்துகொண்

டாள்.

L

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/266&oldid=1585524" இலிருந்து மீள்விக்கப்பட்டது