உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

235

L

10. தென்னமரம்

தென்னமரமானது நீர்வளம் நிலவளங் கெழுமிய மருதநிலத்தின் கண்ணேதான் மிகுதியாய் வளர்ந்து பல பயன்களை அளிக்கின்றது. சிறுபான்மை கடலோரமாக மணல் அடர்ந்த நெய்தல் நிலத்திலும் இதனை வைத்துப் பயிராக்குகின்றார்கள். இனி, மலையடுத்த நிலங்களிலும் இப்போதிது பயிர்செய்யப்படுகின்றது ; என்றாலும், இது மருதநிலத்தின்கட் கொழுமையாக வளர்ந்து நீண்ட நாள் உயிரோடிருந்து பெரும்பயன் பரும்பயன் றருவதுே றருவதுபோல் மற்றை நிலங்களில் இஃது அத்துணைக் கொழுமையாக வளர்ந்து நீண்டகாலமிருந்து பயன்றருவதில்லை. இன்னுஞ், சூடுங் குளிர்ச்சியும் ஒத்த நிலைமையிலுள்ள இத்தென்னிந்திய நாட்டில் இஃதோங்கி வளர்ந்து பெரிதும் பயன்றருமாறு போற், பனிமிகுந்த இமயமலைமேலும், இமயமலைச்சாரலிலுள்ள வடநாடுகளிலும், நம் ஆங்கில அரசினர் வாழும் பிரித்தானிய தேயத்திலும், அதனை யடுத்துள்ள ஐரோப்பிய நிலப்பகுதி களிலும் இது பயிராவதேயில்லை. ஆனாலும்; ஆங்கில மக்கள் தம்மூர்க்குப் புதுமையான இத்தென்ன மரத்தைத் தம்மவர்க்குக் காட்டல்வேண்டிக், கண்ணாடி வீடுகள் அமைத்து அவற்றி னுள்ளே இதனை வளர்த்துக் கண்காட்சிக்காக வைத்திருக் கின்றார்கள். அவ்வாறவர்கள் பேருழைப்பெடுத்துப் பெருஞ் செலவு செய்து இதனைப் பயிராக்கியும், இஃது அக்கண்ணாடி வீட்டுட் குறுகி வளர்ந்து, வெறுங்காட்சிக்குப் புதுமையாய்க் காணப்படும் அவ்வளவேயல்லாமற், பூத்துக்காய்த்துப் பயன் அளிப்பதேயில்லை.

இனி, இத்தென்னாட்டிற் பயிர் செய்யப்படும் இ டங் களிலும், இஃது ஆங்காங்குள்ள நிலத்தின்றன்மை நீரின்றன் மைகளுக் கேற்பச் சுவை வேறுபட்ட காய்களையுடையதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/267&oldid=1585525" இலிருந்து மீள்விக்கப்பட்டது