உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் -18

யிருக்கின்றது. மருதநிலத்தென்னைகள் தருந் தேங்காய்களின் நீரும் பருப்பும் நடுத்தரமான ன்சுவையும் மணமும் வாய்ந்திருக்கின்றன; நீர்வள நிலவளங்களிற் சிறந்த சோழ நாட்டுத் தேங்காய்கள் இத்தன்மைகள் உடையனவே யாகும். மலையாளநாட்டுத் தேங்காய்கள் இனிப்புடையனவாய்க் காணப்படினும்,

அவற்றினின்றெடுக்கப்படும்பால் மொச்சை நாற்றம் வீசி வயிற்றைக் குமட்டுகின்றது. நெய்தல் நில மணல் வெளிகளிற் பயிராகுந் தென்னைகளின் தேங்காய் நீரும் பருப்பும் உப்புக்கரிக்குந் தன்மையவாய் இருக்கின்றன. யாம் இருக்கும் இப் பல்லவபுரம் மலைசூழ்ந்துள்ளதோர் இடமாகலின், இதன் கண் அமைத்துள்ள எமது தோட்டத் திற் பயிராகியிருக்குந் தென்னைகளின் காய்கள் தித்திப்புச் சுவை மிகுந்தனவாயிருக்கின்றன; L மணமும் இசைவான தாகவே யிருக்கின்றன. ஆயினும், இவை மிகுதியாய்க் காய்ப்பதில்லை; எருப்பெய்து பலகாலும் நீர்பாய்ச்சிச் சிரைகழித்துச் செய்யுஞ் செய் நேர்த்தியினளவுக்குத் தக்கபடி தானும் இவை பெரும்பயன் அளிப்பதில்லை, சிறு பயனையே தருகின்றன. மணற்பாங்கான இடங்களிற் பயி பயிராகும் தென்னைகளோ குலைகுலையாய்க் காய்க்கின்றன; ஆனால், அவற்றின் இளநீரும் அதன்கண் வழுக்கையும் முற்றின நெற்றின் பருப்பும் அத்துணை இன்சுவை வாய்ந்தனவாய் இல்லை. அது நிற்க.

இனி, இத் தென்னாட்டின் தெற்கே உலவும் இந்தியமாக் லின் கண்ணவான இலங்கை, நக்கவாரம், சுமத்திரா, சாவகம் முதலான தீவுகளில் தென்னமரங்கள் பெரும் பெருந்

தோப்புகளாக வைத்துப் பயிராக்கப்படுகின்றன.

தென்னைகள் 10 அடி முதல் 100 அடி யுயரம் வரையில் வளரும். இவற்றின் அடிமரத்திற் கிளைகளேனுங் கொப்புக ளேனும் உண்டாவதில்லை; இஃது ஒரே நீளமாகவே வளர்ந்தோங்குகின்றது. இதன் உச்சியிற் பண்னிரண்டு முதற் பதினைந்து வரையிற் பச்சோலை மட்டைகள் கிளைத்து நாற்புறமுங் கவிந்து விளங்குங் காட்சி, அது தன்றலை மேலுள்ள பசிய நெடுங் கூந்தலை அவிழ்த்துவிட்டு மெல்லிளந் தென்றலில் அதனை ஈரம் புலர்த்துவதுபோற்றோன்றுகின்றது. இதன்கண் ஒட்டியிருக்கும் பச்சை மட்டைகள் ஒவ்வொன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/268&oldid=1585527" இலிருந்து மீள்விக்கப்பட்டது