உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

237

பசுமை மாறிப் பழுத்துப் பற்றுவிட்டுக் கீழ் விழுதற்கு ஆறு திங்கள் செல்கின்றன வென்று பயிர் நூல்வல்லார் கணக்கெடுத் திருக்கின்றார்கள். அதன்படி ஒரு கணுச்சுற்றில் ஒட்டியிருக்கும் இவ்விரண்டு மட்டைகள் ஆறு திங்களிற் கீழ்விழப், பிறகு வெறுமையாய் காணப்படும் கணுச்சுற்றுகளை எண்ணிக் கணக்கெடுத்து ஒவ்வொரு தென்னமரத்தின் வாழ்நாளையும் உறுதிப்படுத்தல் கூடுமென்று சொல்லுகிறார்கள். இக்கணுச் சுற்றுகளின் உதவி கொண்டுதான் கள்ளிறக்குஞ்சான்றாருந், தேங்காய் பறிக்குங் குடியானவர்களுந் தென்னமரங்களின் மேல் ஏறுகிறார்கள். வையில்லையேல், நீளமான ஏணிகளின் உதவி உதவி கொண்டன்றி வழுவழுப்பான மரத்தின்மேல் ஏறுதல் இயலாது.

ம்

இனித், தென்னைகள் பூக்குங்காலம் வருங்கால் மற்றை மரங்களைப்போற் பூவெடுப்பதில்லை. முதலிற், பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் திரண்டு நீண்ட பாளைகளே மேல் உள்ள மட்டைகளின் அடியிலிருந்து கிளைத்தெழுகின்றன. தாமரைக் குளங்களின் கரைமேல் நிற்குந் தென்னைகளின் நிழல் அக் குளநீரிற் றோன்றுங்கால், அவற்றின் ன் உச்சியில் உள்ள முழுப்பாளைகளின் நிழல் அந் நீரின்கண் உலவும் பெரிய வரால்மீன்களையே ஒத்திருக்கின்றனவென்று தமிழ்ப் பாவலர் ஒருவர் பாடியிருக்கின்றார். பிறகு, சிலநாட்சென்றபின் இப் பாளைகள் வெடிக்க, இவற்றின் உள் உள்ள பூக்கள் தூவெண்ணிறத்தினவாய் வெள்ளிய கவரிபோல் அலர்ந்து விளங்குகின்றன; பூ நரம்புகளின் நெடுக வெள்ளிய முத்துப் போன்ற இளம்பிஞ்சுகள் தோன்றிச் சிலநாட் சென்றபின் பச்சிளங் குரும்பைகளாக மாறுகின்றன; மரத்தின் ஊட்டத் திற்கும் வலிவுக்குந் தக்கபடி குரும்பைகள் உதிராமற் பெருக் கின்றன; மரம் அவையிரண்டிலுங் குறைவு படுமாயிற் குரும்பைகள் பெரும்பாலும் உதிர்ந்துபோக, எஞ்சிய மிகச் சில குரும்பைகளே பெருத்து இளநீராகவும், பின்னுஞ் சில திங்கள் கழித்துத் தேங்காய்களாகவும், மற்றுஞ் சில திங்கள் கழித்து மட்டைகள் காய்ந்துபோன நெற்றுகளாகவும் முடிவு பெறுகின்றன. தேங்காய்களாகவும் நெற்றுக்களாகவும், முதிர்ந்தவைகள் தாமே கீழ் விழுகின்றன. ஆதலாற், பழுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/269&oldid=1585528" இலிருந்து மீள்விக்கப்பட்டது