உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் 18

மட்டைகளும் முற்றின நெற்றுக்களும் உடைய உடைய தென்ன மரங்களின்கீழ் ஆடவரும் பெண்டிரும் சிறாரும் அமர்தலும் இயங்குதலும் ஆகா.

தென்னந் தோப்புகளின் பக்கத்தே கமுகஞ் சோலை களும் வாழைததோட்டங்களும் அவற்றை யடுத்து வயல் நிலங்களும் அமைந்திருத்தல் சழுமை மிக்க சோழ நாட்டிலே இன்றுங் காணலாம். இந்நிலையில், தென்னை களில் முற்றிப்போன தேங்காய்களும் நெற்றுகளும் கீழ் உதிர்தலால், அவை அடுத்துள்ள பாக்கு மரங்களிற் றாக்கி அவற்றின் பாளைகளை முறித்து விடுதலும் வாழை மர ங் களில் மோதி அவற்றின் தாறுகளைக் கிழித்து விடுதலுமாகிய கழ்ச்சிகள் அங்குப் பலகாலுங் காணப்படுகின்றன. இற்றைக்கு ஆயிரத்தெழு நூறாண்டுகட்கு முன்னிருந்த பெருமான் தாம் அருளிச்செய்த

மாணிக்கவாசகப்

திருச்சிற்றம்பலக் கோவையாரிற் போந்த,

“தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீஉமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமிஎந் தேமொழியே.’’

என்னுந் திருப்பாட்டில் இத்தகைய இயற்கை நிகழ்ச்சி சோழ நாட்டிற் பலகாலும் நிகழ்தலைத் தாம் கண்டுகூறுதல் கொண்டு, இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே சோழமா நாடானது தென்னந் தோப்புகளும் கமுகஞ் சோலைகளும் வாழைத்தோட்டங்களும் இடையிடையே குழுமிய வயல் நிலங்கள் வாய்ந்திருந்தமை தெற்றெனப் புலனாகின்றது.

இனி, நிலவளம் நீர்வளம் இன்மையினாலும் வேண்டு மளவு எரு முதலான ஊட்டந் தரப்படாமையினாலுஞ் சில பல தென்னைகள் அருமையாய்க் காய்க்குங் காய்களுஞ் சூம்பிப் போதலுடன் உள்ளீடில்லாச் சொத்தைகளாகவும் பயன்படா தொழிகின்றன. இங்ஙனஞ் சொத்தையாய்ப் போகுந் தேங்காய் களைத் தேரை மோந்தவையென்று குடியானவர்கள் கூறுகின்றார்கள். தேரையென்பது தேங்காய்க்கு வருஞ் சொத்தை நோய் என்பது தெரியாத கீழ் மக்கள், தேரை என்னும் ஒருவகைத் தவளை மோந்து தேங்காய் சொத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/270&oldid=1585529" இலிருந்து மீள்விக்கப்பட்டது