உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

239

யாகின்றதெனப் பிழையாகப் பேசுகின்றார்கள். ஆனால், இற்றைக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த நச்சினார்க் கினியர் என்னும் உரையாசிரியரோ விளாங்காய்க்கு வரும் நோயை பேழம் என்னுந் தேங்காய்க்கு வரும் நோயைத் தேரை என்றும் உண்மையையுள்ள வாறறிந்து ஓதிய நுட்பம் னைவரும் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இங்ஙனம், நிலத்தின் கொழுமையும் நீரின் கரப்பும் இல்லாத பகுதிகளில் தென்னமரங்களைப் பயிர் செய்வது பெரும்பயன் றராமையால், அவையிரண்டும் உள்ள இடங்களைத்தெரிந்தெடுத்துப் பயிர் செய்வதில் அனைவருங் கருத்துடையவர்களாய் இருத்தல் வேண்டும்.

இனித், தென்னமரங்களால் மாந்தர் அடையும் பயன் கள் சிலவற்றை இங்கெடுத்துக் கூறல் வேண்டும். முதலிற் பயன்படுவன தென்னமட்டைகளேயாகும். இம் மட்டை ம் களைப் பிளந்து இருபக்கத்து முள்ள ஓலைகளை முடைந்து ஆக்கிய கீற்றுகள் வீடுகளுக்குங் குடில்களுக்கும் மேற் கூரைகளாக இணைத்துக் கட்டப்படுகின்றன. சோழ நாட்டிலுள்ள சிற்றூர்களில் உயிர்வாழுங் குடியானவர் பெரும்பாலாரின் வீடுகள் தென்னங்கீற்றுகளாற் சமைத்த மேற்கூரைகள் வாய்ந்தனவாகவே யிருக்கின்றன. மற்றுத், தொண்டைநாடு, பாண் டி நாடுகளிலுள்ள குடியான வர்களும் எளியவர்களுமோ பனையோலைகளினாலேயே தாமிருக்கும் இல்லங்களுக்குங் குடில்களுக்கும் மேற்கூரை வேய்கின்றார்கள். அஃதேன் என்றாற், சோழநாட்டில் தென்னைகள் மிகுதியாயிருக்கின்றன. அவற்றின் கீற்றுகள் குறைந்த விலையிலும் விலையின்றியும் அங்குள்ளார்க்குக் கிடைப்பதுபோல, ஏனையிரு நாட்டார்க்குங் கிடைப்ப தில்லை; ஏனைத் தொண்டைநாடு பாண்டி நாடுகளிலோ L பனந்தோப்புகளே அளவின்றி அடர்ந்திருக்கின்றன. அதனால் இந் நாடுகளில் உள்ளார்க்குப் பனையோலை களே நிரம்பவும் பயன்படுகின்றன. இனி, ஈழ நாட்டில் உள்ளாரோ தென்னையையும் பனையையும் ஏறக்குறைய ஒத்த நிலையில் வைத்துப் பயிர்செய்து வருதலால், அவர்கள் தென்னங் கீற்றுகளையும் பனையோலைகளையும் பொது வாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/271&oldid=1585531" இலிருந்து மீள்விக்கப்பட்டது