உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் -18

இனித், தன்னமட்டைகளின் ஓலைகள் கீற்றாக முடையப்படாவிட்டால், அவற்றின் இலைகள் கழிக்கப் பட்டு, அவற்றினின்றும் ஈர்க்குகள் ஈர்ந்தெடுக்கப்பட்டு விளக்குமாறுகளாகக் கட்டப்படுகின்றன. இவ்விளக்கு மாறுகளைத் தொண்டைநாட்டார் ‘தென்னந் துடைப்பம்’ என்று சொல்லுகிறார்கள். ஒருவகைப் புல்லிலிருந்தெடுக்கப் படும் ‘பூந்துடைப்பம்' மிகப் பொடியான புழுதிகளையுந் துடைத்து நிலத்தைத் துப்புரவு செய்யவல்லது. மற்றுத் தென்னந் துடைப்பமோ பரும்படியான மண்ணையுஞ் சிறு கற்களையுந் துடைத்து அகற்றுதற்கு உதவி செய்வது. கீற்றுகள் பின்னவும், ஈர்க்குகள் கிழிக்கவும் வெட்டப்பட்ட பகுதிகள் போக எஞ்சிய அடிமட்டைகள் வெயிலிற் காயவைத்து அடுப்பு எரிக்கப் பயன்படுகின்றன.

னித், தென்னம்பாளைகளைக் கள் இறக்காமல் விட்டால், அவை மடல் விரிந்து, விசிறிபோல் வெண்மை யான பூக்களைத் தோற்றுவிக்கின்றன. நீண்ட அப் பூக்களின் நெடுகப் பிடிக்கும் பிஞ்சுகளிற் சில பல உதிர்ந்து போகச் சில பல சிறிது பெருக்கத் துவங்குகின்றன. சில நாட்களிற் பெருக்குந் தென்னம் பிஞ்சுகள் ‘குரும்பைகள்' ஆகின்றன. இக் குரும்பைகளும் வளர்ந்து பெருத்தால் அவை இளநீர்கள் என்று வழங்கப்படுகின்றன. வெப்பம் மிகுந்த வேனிற் காலத்தில் நாவறட்சியும் இளைப்புங் களைப்பும் மிகப் பெற்ற வழிப்போக்கர்கள் தென்னந் தோப்புகளைக் கண்டால் வானுலகத்தையே கண்டாற் போலவும், அங்கே விற்கப்படும் இளநீரை வாங்கி அதன் இனிய நீரையும் வழுக்கையையும் அருந்தினால் அவ்வானுலகத்து அமிழ்தத்தினையே அருந் தினாற்போலவும் உள்ளங்களித்து அயர்வு நீங்கப் பெறு கின்றனர். யாம் செந்தமிழ் கற்பித்த மாபெருங் கிறித்துவக் கல்லூரியில் வரலாற்று நூலாசிரியாய் இருந்த ஒரு துரை மகனார் ஒருகால் ஒரு வேனிற்காலத்திடையில் தம் மனைவி மக்களுடன் மாட்டு வண்டியிலேறி ஓர் ஊரிலிருந்துமற் றோர் ஊர்க்கு ஏகினார். இங்ஙனம் இவர் புறப்பட்டது காலை து வேளை. இவர் சென்ற வழிநெடுக ஊர் ஏதும் இல்லை. இடையிடையே சிற்சில ஏழைக்குடில்கள் மட்டும் இருந்தன. நடுப்பகலில் இவர்க்கும் இவர்தங் வர்தங் குடும்பத்தார்க்கும்

,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/272&oldid=1585532" இலிருந்து மீள்விக்கப்பட்டது