உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

241

அடங்கா நாவறட்சியும் கடும்பசியுங் களைப்பும் மிகுந்தன. கையிற் சில தின்பண்டங்கள் வைத்திருந்தனரேனும் அவை நெகிழ்ந்த பதமாயில்லாமையால் அவற்றில் அவர்கட்கு வேட்கை சன்றிலது. வழியில் அவர்கட்கு இசைந்த உணவுப்பண்டமுங் கிடைத்திலது. அதனால் அவர்கள் மிக்க அயர்வுடன் சல்கையில், அவர்களது வண்டி ஒரு தென்னந்தோப்பின் அருகே வந்தது. வர்கள் படுந் துன்பத்தைக் கண்ட வண்டிக்காரன் அத் தோப்பின் அண்டையில் வண்டியை நிறுத்தி, அத் துரைமகனாரையும் அவர் தங் குடும்பத்தாரையும் கீழிறங்கி மரநிழலில் அமரும் படி வேண்டினான். அடர்ந்துயர்ந்த அத் தென்னந்தோப்பின் நிழல் வெந்துபோன உடலையும் உயிரையுந் தளிர்க்கச் செய்யுந் தட்பம் வாய்ந்ததாய் இருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த அத் துரைமக்கள் வண்டியைவிட்டுடனே கீழிறங்கி அம் மரங்களின் குளிர்ந்த நீழலில் வைகினர். தாம் இருந்த இடத்தின் ஓரமாய்ச் சென்ற ஒரு சிறிய வாய்க்காலின் தெளிநீரில் தம் முகங்களைக் கழுவித் தங்கால்களையும் அதிற் றோய்த்துக்கொண்டு சிறிது களைப்புத் தீர்ந்திருந்தனர். இதற்குள் இவர்களின் வண்டிக் காரன் வேண்டியதற்கு இணங்கி, அத் தென்னந் தோட்டக் காரன் சில மரங்களின் மேலேறி இளநீர்க் குலைகள் சிலவற்றை வெட்டிக் கொணர்ந்து, இளநீர்க் கண்களைத் திறந்து, அவற்றின் நீரை அத்துரைமகனாரின் சிறு பிள்ளைகளும், மனைவியாரும், அவரும் பருகக் கொடுத்தனன். அவர்கள் அதனை வேண்டுமட்டும் அவாவுடன் பருகிய பின்னர், அவ்விளநீர்க் காய்களை நடுவே பிளந்து, உள்ளுள்ள வழுக்கை களைப் பெயர்த்தெடுத்து, அவற்றை அவர்கள் அருந்தத் தந்தனன். அவற்றை அவர்கள் சுவைத்து உண்ணுங்கால் அவற்றின் மென்மையினையும் இனிமையினையும் வியந்து, இவை இறைவனால் அருள்கூர்ந்து அளிக்கப்பட்ட தெவிட்டா அமிழ்தமே யாமெனக் கருதினர். தமக்கு வந்த களைப்பும் பசியும் நாவறட்சியும் ஒருங்கே நீங்கி அடங்கா மகிழ்ச்சியடைந்த அத் துரைமக்கள், அத் தோட்டக்காரனுக்கு ஓர் ஐந்து ரூபா தமது நன்றிக்கறிகுறியாய் வழங்கினர். அதனைப் பெற முதலில் அவன் மறுத்தனனா யினும் அவர்கள் அவனைக் கட்டாயப் படுத்தியதன்மேல் அவன் அதனை உவகையுடன் பெற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/273&oldid=1585533" இலிருந்து மீள்விக்கப்பட்டது