உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

  • மறைமலையம் -18

கொண்டான். சிலநாட் சென்றபின் அத் துரைமகனார் கல்லூரிக்குப் போந்து மாணாக்கர்க்கு நூல் கற்பிக்கையில், தாம் தங் குடும்பத்துடன் வழிச்செல்லுங்கால் நண்பகலில் நாவறட்சி யாலும் பசியாலும் பட்ட பொறுத்தற்கரிய துன்பத்தை எடுத்துரைத்து, தெங்கிளநீரால் அத்துன்பம் நீங்கி உயிர் பிழைத்த வரலாற்றையும் நன்றியுடன் நுவன்று 'இத்தகைய தென்னமரங்களே கற்பக மரங்களாகும்; இம் மரங்களை யுடைய இத் தென்னாடே விண்ணாடாகும்' என உண்மையை யுருக்கத்தொடு மொழிந்தனர்.

இனி, இளநீர் மட்டை காயாமலே முதிர்ந்தபோது ங்காய் ஆகின்றன. அது தெரிந்து தோப்புக்காரர் அவற்றைப் பறித்து மட்டை களை உரித்தெடுத்துத் தேங்காயை விற்பனை செய்கின்றனர். தேங்காயை இரு கூறாக உடைத்து ஒவ்வொரு மூடியினுள்ளும் உள்ள வெண்மை யான பருப்பை எடுத்தரைத்து கத்தரிக்காய் வாழைக்காய் உருளைக்கிழங்கு முதலியவற்றுடன் சேர்த்து கறி சமைக்கி றார்கள். அல்லது தேங்காய் மூடியைத் திருகுபலகைகொண்டு திருகியெடுத்த தேங்காய்ப் பூவைப் பிழிந்து, அதில் வரும் பாலைக் கலந்து மேற்சொன்ன காய் கிழங்குகளையும் இட்டுவைக்குங் குழம்பு நறுஞ்சுவை மிக்கதாய் இருக்கின்றது. தேங்காய்ப் பருப்பை எந்த வகையிற் சேர்த்துச் செய்தாலுங், கறி குழம்புகள் இன்சுவையும் நறுமணமும் உடையவாதலுடன், உடம்பினைச் செழுமையாக வளரச் செய்தற்கு இன்றியமை யாது வேண்டப்படும் உய்வனவுகளும் (Vitamins) பொருந்தப் பெற்றனவாயிருக்கின்றன. ஆனாலும், அவ்வவர் உடம்பின் வ லி வு க்கும், அவ்வவரின் தீனிப்பை ஏற்றுச் செரிக்கச் சய்யும் அளவுக்கும் உணர்ந்து பார்த்துத் தேங்காயைச் சிறிது பெரிதாக உட்கொள்ளல் வேண்டும். தேங்காயை மிகுதியாய்ப் பயன்படுத்துகிறவர்க்கு மயக்க நீர் மிகுமாதலால், அவர் அதனைத் தணிப்பதற்கு எலுமிச்சம்பழச்சாற்றைக் கறி குழம்பு மிளகுநீர் மோர் முதலியவற்றிற் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

இனித்,

6

தேங்காயின் மட்டை முற்றுங் காய்ந்து

நெற்று ஆனபின், அதனுள்ளிருக்கும் பருப்பின் பால் வற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/274&oldid=1585534" இலிருந்து மீள்விக்கப்பட்டது