உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

243

நெய்யாக மாறுகின்றது. அந் நிலையில் ஓட்டினின்றும் எளிதிற் பெயர்த்தெடுக்கப்படும் பருப்புக் கொப்பறை எனப் பெயர்

பெறுகின்றது. அக்கொப்பறையை வெயிலிற் பரப்பி உலர்த்தியெடுத்து செக்கிலிட்டு அரைத்து நெய் எடுக் கின்றார்கள். இத் தேங்காய் நெய்யினின்றும் எத்தனையோ வகையான பண்டங்கள் செய்யப்படுகின்றன. மெழுகு திரி யானது தேங்காய் நெய்யினின்றுஞ் செய்யப்படும் பல்வேறு பண்டங்களுள் முதன்மை பெற்றதாகும். மலையாளத்தி லுள்ள மக்கள் தேங்காய்ப் பாலையும், நெய்யையும் மிகுதி யாய்ப் பயன்படுத்துகிறார்கள்; தலைக்கும் உடம்புக்கும் அவர்கள் தேய்த்துக்கொள்வது தேங்காய் நெய்யேயாகும்; அவர்கள் அருகே வருங்கால் ஒருவகை மொச்சை நாற்றம் வீசுதற்குக் காரணம் இதுவேயாம். எள் நெய் தேய்த்து முழுகுஞ் சோழ நாட்டார் பாண்டி நாட்டாரிடமிருந்து இத்தகைய நாற்றம் வீசுவதில்லை. தேங்காய் நெய்க்கு மயிர் கருமையாய் நீண்டு வளருமாதலால், மலையாளத்து மாதரின் கூந்தல் கருகியடர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் இதுவே. கூந்தலை வளர்க்கும் மணநெய்களிற் பெரும்பாலான தேங்காய் நெய்யினின்றுஞ், சிறுபாலன எள் நெய்யினின்றும் ஆக்கப் படுகின்றன. எள்ளினின்றும் எடுக்கப்படும் நெய் எண்ணெய் எனப் பெயர்பெறலாயிற்று. எண்ணெயை மிகுதியாய்ப் பயன்படுத்துஞ் சோழ நாட்டார் தாங் குறைவாய்ப் பயன் படுத்தும் மற்றை நெய்களையும் எண்ணெய் என்னுஞ் சொல்லொடு சேர்த்தே வழங்குகின்றனர்; ங்ஙனம் வழங்குங்கால் எண்ணெய் எனுஞ்சொல் எண்ணை எனத் திரிக்கப்பட்டு "தேங்காயெண்ணை விளக்கெண்ணை இலுப்பையெண்ணை' என இயைத்து வழங்கப்படுகின்றது.

66

இனித், தேங்காய் நெற்றினின்றும் உரித்தெடுக்கும் மட்டைகளை நறுக்கித் தேங்காய்ப்பஞ்சு எடுத்து, அப் பஞ்சினாற் பல பருமனும் பல நீளமுமுள்ள கயிறுகளைத் திரிக்கின்றார்கள். கிணறுகளினின்றும் நமது நாட்புழக்கத் திற்கு முகக்குந் தண்ணீரும், வயல்கள் தோட்ட ங்கள் பூங்காக்கள் முதலியவற்றிற்குப் பாய்ச்சுந் தண்ணீரும் இத் தன்னங் கயிறுகளின் உதவியினாலேயே எடுக்கப்படு கின்றன. இன்னும், படகுகள் செய்தற்கும், அப் படகுகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/275&oldid=1585535" இலிருந்து மீள்விக்கப்பட்டது