உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் -18

மரக்கலங்களிலும் கட்டும் பாய்கள் புனைதற்குந், திருக் கோயிற் றிருவிழாக் காலங்களில் இறைவன் றிருவுருவங் களைத் தேர்மேல் எழுந்தருளச் செய்து அத்தேரை இழுக்கும் நீண்டு பருத்த வடங்கள் திரித்தற்குந் தென்னம் பஞ்சுகளே பெரிதும் பயன்படுகின்றன.

ஒனிப், பருப்பெடுத்தபின் விடப்படும் ஓடுகள் சிரட்டைகள் எனச் சொல்லப்படுகின்றன. இச் சிரட்டை களை ஏழை எளிய மக்கள் தம் உணவுப் பண்டங்களை வைப்பதற்கும், நீர் பருகுதற்குங் கையாளுகின்றனர்; அவை களிற் பழுதாய்ப் போனவைகளை அடுப்பிலிட்டும் எரிக் கின்றனர். சில தென்னைமரங்களின் காய்கள் ஒரு சிறு குடத்தினளவு பெரியனவாய் இருத்தலால் அவைகளின் சிரட்டைகளை இரவலர்களுந் துறவிகளும் உணவுக்கலங்க ளாகப் புழங்குகின்றார்கள். இதனாலேயே துறவிகள் கையேந்திவரும் உணவுக்கலம் 'திருவோடு' எனச் சொல்லப் படுகின்றது.

இனித், தென்னைகள் மூத்துப் பட்டுப்போகும் காலம் அணுகுதலைக் கண்டவுடன் உரியவர்கள் அவற்றை வாளால் அறுத்துக் கைத்துண்டுகளாகவும் உத்திரங்களாகவும் வீடு களின் மேற்கூரை வேய்வதற்கும், நீர் இறைக்கும் ஏற்ற மரங்கள் அமைப்பதற்கும், நீர் ஓடுங் கால்வாய்களுக்குப் பாலங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றார்கள். நாட்பட்டுக் காழ்ப் பேறிய தென்னங்கட்டைகள் மிக்க வலிவு வாய்ந்தனவாய் உளுத்துப் போகாமல் நீண்டகாலம் பெருஞ் சுமைகளையுந் தாங்கி நிற்கும். இவ்வாறாகத் தென்னைமரத்தின் ஒவ்வோர் உறுப்பும் மக்கட்கு நிரம்பவும் பயன்பட்டு வருதல் கண்டே கற்றோர்கள் இதனையும், இதனோடொப்பப் பயன்படும் வாழை பனை முதலிய மரங்களையுங் 'கற்பகதரு'வென உயர்த்துப் பேசி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/276&oldid=1585536" இலிருந்து மீள்விக்கப்பட்டது