உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

245

11. மக்கள் வாழ்க்கை

ஓரறிவுடைய புற்பூண்டுகள் முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறான பலகோடி உயிர்களில் மக்கட் பிறவியே சிறந்ததென்பது எல்லார்க்குந் தெரிந்த உண்மையன்றோ? ஏனெனில், ஆறாவதான பகுத்தறிவு மக்கட் பிறவியெடுத்த உயிர்கட்குப் பேரளவினதாய் அமைந்தாற்போல, ஏனைச் சிற்றுயிர்கட்கு அஃது அங்ஙனம் அமையவில்லை; இவைகட்கு அவ்வறிவு ஏறியுங் குறைந்தும் பலதிறத்ததாய்க் காணப்படுகின்றது. மக்களுள்ளும் மற்றைச் சிற்றுயிர்களைப்போற் பகுத்தறிவு மிகக் குறைந்த நிலையிலுள்ளார் மிகப் பலர் உண்டு. அவரெல்லாம் விலங்கினங்களைப் போல் ஐம்பொறிவழிச் செல்லும் ஐந்து புலனறிவே உடையராதல் உற்று நோக்குவார்க்குத் தெற்றென விளங்கும். அது கண்டே முதலாசிரியர் தொல்காப்பியனார்,

"மாவும் மாக்களும் ஐயறி வினவே'

என்றருளிச் செய்தார். இதனால், மக்களில், குறைந்த அறிவினராய் மக்களைப்போல் வடிவுமட்டு முடையராய் இருப்பாரை ‘மாக்கள்’ என்றது பெரிதும் பொருத்த முடைத்தாதலால் காண்க. முதன்முதற்றோன்றிய மாக்கள் வேட்டுவ வாழ்க்கையில் இருந்தோர் ஆவர். அவர்க்குப் பின் பன்னெடுங் காலங்கழித்துத் தோன்றியவர் ஆடுமாடு மேய்க்கும் மேய்ப்பர்கள் ஆயினர். அவர்க்குப் பின்னர் பல்லாயிர ஆண்டுகள் கழித்துத் தோன்றியவர் உழுதொழில் வாழ்க்கையை மேற்கொண்ட உழவர் ஆயினர்.

.

வேட்டுவ வாழ்க்கையில் உள்ள மாக்களை இஞ் ஞான்றுங் காணலாம். நீலமலையில் உள்ள மக்கள் மிகக் குறைந்த அறிவுடையவராகவே யிருக்கின்றனர். களினுங் குறைந்த அறிவினராய் இருந்தவர் மேல் நாடுகளில்

இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/277&oldid=1585537" இலிருந்து மீள்விக்கப்பட்டது