உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

  • மறைமலையம் -18

உள்ள மலைக்குகைகளில் உறைந்து காலங் கழித்தனர். மரஞ் செடி கொடிகளில் உண்டான காய் கனி கிழங்கு இலை பூ முதலியனவே அவர்கட்கு உணவுப் பொருள்களாய் இருந் தன. உழுது பயிர் செய்து அவ்வாற்றால் உணவுக்கேற்ற வித்துக்களைப் பெறும் வழி அவர்கட்குத்தெரியாது. மேற்கூறிய தின்பண்டங்கள் கிடையாதபோது, ஆடுமாடு கடம்பை முதலான நில விலங்குகளையும், ஏரியாறு கடல் முதலான நீர்நிலைகளின் ஓரங்களில் இருந்தோர் அஞ் ஞான்றிருந்த பெரிய பெரிய மீன்களையும் பிடித்து அயின்று அவற்றின் தோலையே ஆடையாகவும் உடுத்துக்கொண்டனர்.

அப்பண்டை நாளில் யானையினும் பதின்மடங்கு பெரிய மாமத்து என்னும் பேரியானையும், பனை தென்னை முதலான நீண்ட மரங்களின் உயரத்தளவும் வளர்ந்து அவற்றின் உச்சி யிலுள்ள இலை பூ காய் கனிகளைக் கறிக்கும் பரிய பெரிய விலங்குகளும் இருந்தமையால், அஞ்ஞான்றிருந்த மாந்தர் அவ் விலங்குகளுடன் ஓவாமற் போராட வேண்டுவதாயிற்று. அப் போராட்டத்தில் தப்பிப் பிழைத்தவர் சிலரேனும் ஆங்காங்கு இல்லாதொழிந்திருந்தால் மக்கட்பூண்டே காணப்படாமல் அடியோடழிந்து போயிருக்கும். என்றாலும், அங்ஙனம் அழிந்தொழியாமல் இன்றுகாறும் அவர்களைப் பிழைத் திருக்கச் செய்தது எது? அஃது ஆராய்ச்சி யறிவேயாம்.

மேற்கூறிய விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க இடம் ம் பெறாதபோது, பண்டை மக்கள் மிக நீண்டுயர்ந்த மரங் களின்மேற் பருத்த கிளைகளிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர் வாழ்ந்தனர். அவர்கள் அக் குடிசைகளிலிருந்து கீழ் இறங்கவுந் திரும்ப மேலேறவும் நூலேணி அமைத்துக்கொள்ளத் தெரிந்திருந்தனர். இத்தகைய வாழ்க்கை யிலிருந்த ஒருவனைக் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் சேணோன் என நுவல்கின்றனர். மிக உயரமாய் வளர்ந்த தேக்குமரங்கள், ஆலமரங்கள், அரசமரங்கள் முதலியவைகளை இன்றைக்கும் மேற்கு மலைத்தொடர்களிலும், டையிடையேயுள்ள

அடர்ந்த காடுகளிலும் காணலாம்.

இக் காடுகளின் மரப்பொந்துகளிலுங்கூடக் கானவர் களுந் துறவிகளும் ஒடுங்கியிருந்து உயிர் வாழ்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/278&oldid=1585538" இலிருந்து மீள்விக்கப்பட்டது