உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

66

247

இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரம் என்னுஞ் சிவபிரான் றிருக்கோயிலை யாம் வணங்கச் சென்றக்கால் வழியிலிருந்த காடு ஒன்றில் துறவி ஒருவரைக் கண்டு தொழுதேம். அவர் எம்மை அன்பாக வரவேற்றுச் சிறிதுநேரம் எம்மோடு உரையாடினர். அப்போது யான் அவரை நோக்கி, அடிகாள்! கடுங்காற்றுக்கும் பெருமழைக்குந் தாங்கள் தங்குவது எங்கே?" என்று வினவினேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு சென்று சிறிது தொலைவில் வான் அளாவியிருந்த ஒரு பெரிய மரத்தையும், அதன் அடியிலிருந்த ஒரு பொந்தை யும் எனக்குக் காட்டினர். அப்பொந்தில் ஒருவர் இருத்தற்கு வேண்டிய அளவு இடம் இருந்தது.

வி

இனி, மரப் பொந்துகளேயன்றி மலைகளுள்ள இடங் களில் மலைக்குகைகளும் ஆங்காங் கமைந்திருக்கின்றன. அவைகள் பண்டைக்கால மக்களுக்கு உறையுளாயிருந்து பயன்பட்ட ன. இஞ்ஞான்றும் அத்தகைய குகைகளில் உறைவார் உளர். முன் ஒருகால் அன்பு மிக்க இளைஞர் சிலருடன் யாம் திருக்குற்றாலஞ் சென்றபோது, அங்குள்ள மலைமீதிருந்து கீழ் இழியும் அருவியில் நீராடச் சென்றேம். சென்று, அவ்வருவி அம் மலையின் மேற்பகுதியில் ஓடி வரும் இடத்திற்போய் முழுகுதற்கு விழைந்து, சண்பகாடவி எனப் பெயர் வாய்ந்த இடத்திற்குச் சென்றேன். அங்கே அருவிநீர் மேல் உச்சியிலிருந்து வழியும் மலைப் பகுதிக்குப் பக்கத்தே யுள்ள குகையொன்றில் துறவி யொருவர் இருந்தார். அவர்க்கு முப்பதாண்டு இருக்கும்; காவியாடை பூண்ட அழகிய தோற்றத்தினர். அவர் எம்மைக் கண்டதும் நகைமுகங் காட்டி வரவேற்றுத், தாம் இருந்த அக் குகைக்குள் அழைத்தனர். அக் குகை வாயில் மரக்கதவு இட்டுச் சமைக்கப்பட்டிருந்தது. அக் கதவிற் சிறு தொளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவில் அக் கதவைச் சாத்திக்கொண்டு அதன் தொளைகளின் ஊடே வெளியே நிகழும் விலங்குகளின் பூசலைத் தாம் பார்ப்ப துண்டென்று கூறினார். அக் குகையில் ஒருவர் செவ்வனே அமரவும் படுக்கவும் வேண்டிய அளவுக்கு இடம் இருந்தது. இத்தகைய குகைகளும் மரப்பொந்துகளும் இந் நிலவுலகம் எங்கணும் இயற்கையாகவே அமைந்திருத்தலாற் பண்டைக் கால மக்கள், அஞ்ஞான்றிருந்த பெரிய கொடிய வேங்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/279&oldid=1585539" இலிருந்து மீள்விக்கப்பட்டது