உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் -18

.

புலிகட்கும், பேரியானைகட்கும், வலிய மலைப்பாம்புகட்கும் வன்பெரு முதலைகட்குந் தப்பிப் பிழைத்தனர். அவை களுக்கஞ்சித் தம்மைக் காத்துக்கொள்ள வழி தேடும் முயற்சியினாற்றான் ஆராய்ச்சியறிவு விளங்க, ஐயறிவுடைய மாக்களாய் முதலில் விலிங்கினங்களை யொத்திருந்த மாந்தர் பின் நாளேற நாளேற ஆராய்ச்சி யறிவு மிகுந்து, அதனால் ஆறறிவுடைய மக்களாயினர். இதனாலன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார், ஆராய்ச்சி யறிவையே அறிவெனக் கருதி,

'அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்"

என்று அருளிச் செய்தார்.

L

(குறள் 430)

அஃதொக்கும்; பண்டைமக்கள் மரங்களின் மேலேறிப் பரண் அமைத்து வாழ்ந்தபோதும், குகைகளுள் நுழைந்து ஆண்டுவந்தபோதும், மரம்மீது ஏறக்கூடிய பாம்புகட்குங் கரடி, மந்தி முதலான விலங்குகட்கும் எங்ஙனந் தப்பிப் பிழைத்தனர்? எனின்; தாமிருந்த அவ்வுறையுளைச் சுற்றி மூங்கில் முட்களால் வேலிகள் அமைத்தும், அக் குகைவாயில்களைக் கருங்கற் பாறைகளால் அடைத்தும் அம் மறவிலங்குகளும் மலைப்பாம்பு களும் தம்மை அணுகாமற் காத்துக்கொண்டனர்.

வ்வள

வோடு அப் பண்டை மக்களின் தொல்லை ஒழிந்த பாடில்லை.

தமக்குந் தம்மைச் சார்ந்த தாய்தந்தையர் உடன் பிறந்தார் மனைவி மக்கள் முதலாயினார்க்கும் அடுத்தடுத்து நிகழும் பசியினையும் நாவறட்சியினையும் ஒழித்தற்கு அவர்கள் அங்ஙனந் தாம் மரம் மீதிருந்த பரண்களையும், மலைப்பிளவுகளின் ஊடிருந்த குகைகளையும் L காலங்களில் விட்டு வெளியே வரவேண்டியவரானார்கள். இங்ஙனமாகப் பண்டை மக்கள் பெரிதும் அல்லற்பட்டு வாழ்ந்த காலம் பல்லாயிர ஆண்டுகளாகும்.

பகற்

அக் காலங்களில் அவர்கள் நெருப்பை உண்டாக்கவோ, உணவுப் பண்டங்களை நெருப்பிலிட்டு வேவு வித்துக் காள்ளவோ வழி தெரியாதிருந்தார்கள். பின்னர் நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/280&oldid=1585540" இலிருந்து மீள்விக்கப்பட்டது