உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

249

சல்லச் செல்ல மூங்கிற் புதர்களில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசித் தீப்பற்றி எரிதலையும், அத் தீயில் வெந்த மூங்கில் அரிசி, முன்னே தாம் பச்சையாய்த் தின்ற அவ்வரிசியைவிடச் சுவை மிகுதியும் உடையதாய் இருத் தலையுங் கண்டு கொண்டார்கள். அதிலிருந்து, மரக்கட்டை களை ஒன்றொடொன்று தேய்த்துக் கடைந்து தீயை யுண்டாக்கவுங் கற்றறிந்தார்கள். தீயை யுண்டாக்கத் தெரிந்த பின்னர்த்தான் மக்கள் வாழ்க்கை பலவகையில் நலம்பல பெறுவதாயிற்று. அவ்வாறு தீயை யுண்டாக்குதற்குப் பயன் படுத்தப்பட்ட கோல் ‘தீக் கடைகோல்' எனவும் பெயர் பெறலாயிற்று.

அப் பண்டை நாளில் இருந்த விலங்குகள் யானை யினும் பன்மடங்கு பெரியனவாய்ப், பனைமரத்தினும் உயரம் உடை யனவாய் இருந்தமையால், முற்கால மக்கள், மிக உயரமான மரங்களின் உச்சியிலும், பருத்த விலங்குகள் நுழைதற்கு இயலாத குறுகிய வாயிலமைந்த குகைகளிலும் பருந் திகிலோடு ஒடுங்கிக் கிடந்தனர்; அவர்கள் தாமிருந்த அவ் விருக்கைகளை விட்டுக் கீழ் இறங்கியும் வெளியே இயங்கியும் உணவுப் பொருள்களைத் தேடிப் பெற இயலாமற் பட்டினியும் பசியுமாய் இருந்த நாட்களும் பல. மிகப் பெரிய இடையூறுகளாற் சூழப்பட்டிருந்தமையால், அவ் விடை யூறுகளைக் கடந்து தமது வாழ்க்கையை நடத்துதற்கு எவ்வளவோ சூழ்ச்சி செய்யலானார்கள். அவ்விலங்குகளை அணுகிப் போராடிக் கால்லுதல் ஆகாமையால், தாலைவிலிருந்தபடியே அவற்றைக் கல்லால் அடித்துத் துரத்துதற்கும் மாய்த்தற்குங் 'கவண்' என்னுங் கருவியைக் கண்டு கையாண்டனர். அதனாலும் அவைகளை மாய்த்தல் இயலாமை காணக் காண மூங்கிலை வளைத்து அதன் முனைகளில் நாண் பூட்டிக், கூரிய முனையுள்ள கோல்களை இணைத்து எய்து அவற்றைத் துரத்தியும் மாய்த்தும் வந்தார்கள். அவர்கள் அவ்வாறு பயன்படுத்தி வந்த வளைந்த மூங்கிலுங் கோலுமே பின்னர் வில்லுங்கணையும் ஆயின. ங்ஙனமாகத் துரத்தப்பட்டும், மாய்க்கப்பட்டும் அக் கொடுங் கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/281&oldid=1585542" இலிருந்து மீள்விக்கப்பட்டது