உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

பொதிகை

தமிழ்ப்பேரவை, சென்னைக் கிறித்துவக் கல்லூரி

தமிழ் மிகப்பழைய மொழியா மென்பது

வரம்புடைமையாற்

பரந்துகிடக்கும் இந்நிலவுலகத்தின் கண்ணே பண்டைக் காலந் தொட்டு இலக்கண விலக்கிய வரம்புடை சீர்திருந்தி வழக்கமுற்று வாராநின்ற மொழிகள் தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலியனவாம். உலகத்தின்கட் பேசப்படுவனவாகுந் தொள்ளாயிர மொழி களுள் இவ்வைந்தும் வேறு சிலவும் அங்ஙனத் தொன் மொழிகளென் றுயர்த்துக் கூறப்படுதற்கு இடம் பெறுவதல்லது ஏனைய அவ்வாறு சொல்லப்படா வென்றுணர்க. இவற்றுள் தமிழ் மொழியை ஒழித்து ஒழிந்த வடசொல், இலத்தீன் முதலியவற்றையெல்லாம் ஐரோப்பியப் புலவர்கள் நன்காராய்ச்சி செய்து அவற்றைப் பண்டைக் காலத்து மொழிகளெனப் பெரிதும் பாராட்டிப் போற்றுகின்றார்கள். இனித் தமிழையோ வெனின் அங்ஙனம், உண்மையாராய்ச்சி ச சய்யமாட்டாது நெகிழ விட்டு, அதனைப்பற்றி உரை யுரைக்கும் வழியெல்லாந் தாந்தாம் மனம் போனவாறு சால்லி உண்மைப் பொருள் காணாது ஒழிகின்றார். இதற்கென்னையோ காரணமெனின் வடமொழி முதலான சொற்குரிமை பூண்டு அவற்றை வழங்குவாரான நன்மக்கள் பற்று மிகவுடையராய் அவற்றை வளர்க்கும்படி செய்தலோடு பிறருந் தமக்கநுகூலமாய் நின்றதனை அவ்வாறு வளர்க்கும்படி செய்யுமாறு தூண்டுதலுஞ் செய்து போதரு கின்றார். இனித் தென்றமிழ் நாட்டில் தமிழ் வழங்கு மக்களோ அங்ஙனம் நன்கு பற்றுக் கொளவறியாமல் உண்டிப் பொருட்டுப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/287&oldid=1585548" இலிருந்து மீள்விக்கப்பட்டது