உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

நூலுரை

இளைஞர்க்கான இன்றமிழ்

இதன் முதற்பதிப்பு அடிகளார் விருப்ப ஆவணப்படி 1957 இல் வெளிவந்தது.

“பள்ளிக் கூடங்களில் பயிலும் சிறார்க்கு இனிய எளிய திருத்தமான தனித்தமிழில் எழுதப்பட்ட பாடநூல்கள் இல்லாப் பெருங்குறையை நீக்கும் பொருட்டு 1934 இல் சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூல் எழுதியதைச் சுட்டும் அடிகள் நோக்கைக் குறிப்பிட்டு, இதுகால் இளைஞர்க்கான இன்றமிழ் வெளியிடுவதைப் பதிப்புரை வெளிப்படுத்துகிறது.

திங்களைத் தொழுதல் முதலாக மக்கள் வாழ்க்கை ஈறாக 13 கட்டுரைகளையுடையது இளைஞர்க்கான இன்றமிழ். இனிமை தந்து மகிழ்விப்பதால், 'திங்கள்' என்றும்,

நாளும் வளர்தலால், 'கலையோன்' என்றும்,

இரவில் விளங்குதலால் 'இரவோன்' என்றும், அலவன்

என்றும்

‘அல்லோன்' என்றும்

காலவரை யறை செய்தலால் 'மதி' என்றும்

இடை

இடையே கறையுடைமையால், 'களங்கன்' என்றும் பிறை நிலையில் வளைந்த தோற்றம் தருதலால், ‘குரங்கி' என்றும் அக் கறை முயல்போல் தோற்றம் தருதலால், 'முயற்கூடு' என்றும் பறும் என்பதைப் பொருளொடு புணர்த்து

பயர் விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/30&oldid=1584644" இலிருந்து மீள்விக்கப்பட்டது