உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

  • மறைமலையம் - 18

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டும்"

அருமையை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடல் வழியில் காட்டுகிறார்.

இவ்வாறே எடுத்த பொருளின் பெயர் விளக்கம் - பயன் விளக்கம் - சான்று விளக்கம் எனக் காட்டிக் கட்டுரை எழுதும் பயிற்சியில் வல்லராம் வகையில் நூல் யாத்துளார்.

'நிலையானம்’

என்பதை, 'நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்பதற்கு மட்டும் 14 சான்றுகள் காட்டுகிறார்.

டம்

'காலதியன் கிரிசெலான் கதை' என்பதொரு கதை பெறுகிறது. இத்தாலிய நாட்டுக் கதை. இக் கதை விரிவுடையது. க் மணங் கொள்ள விரும்பாத மன்னனை நாட்டுமக்கள் மணங்கொள்ள வற்புறுத்த, அவன். “யான் என்னுடைய கண்களைக் காண்டே ஒரு மணமகளைத் தேடிப் பெற வேண்டுமே அன்றிப் பிறருடைய ய கண்களைக்

L

காண்டு

அவளைத் தேடி அடைதல் கூடாது” என்று கூறி அவ்வாறே தேடி அடைந்து, மேன்மையுற்ற கதை அதுவாம். பழந்தமிழர் காதல் வாழ்வின் ‘பிழிசாறு' அனையது இது.

திருவள்ளுவ மாலை - கபிலர் அகவல் முதலாம் பிற்காலப் புனைவில் அடிகள் நம்பிக்கை கொண்டது, நம்பமுடியாததாகவே உள்ளமை உண்மையாம்! திருவள்ளுவர், திருவள்ளுவர் வாழ்க்கை, அறஞ்செய்கை, வள்ளுவர், வள்ளுவம் பற்றியவை.

கானத் தோகை தேவமணி கதை என்பது, உள்ளொத்த காதலராகத் திகழ்ந்த கானத் தோகையும் தேவமணியும், அவர்கள் பெற்றேர்களால் வெற்றிபெற இயலா நிலையில், இருவரும் ஒருதுறவுமடம் சார்ந்து ஒருவரை ஒருவர் அறியாராய் வாழ்ந்து, அறிந்த பின்னரும் அத்துறவில் நிலைத்த பெருவாழ்வு உரைப்பதாம். நல்லபடைப்பு. மனோன்மணீயம் சுந்தரனார் படைப்பான சிவகாமி சரிதத்தின் சாயல் இக் கதையமைப்பில் புலப்படுகின்றது!

-

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/31&oldid=1584645" இலிருந்து மீள்விக்கப்பட்டது