உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

269

தெழுத்துகள் இருப்பதால் மட்டும் தமிழ் ஒருமொழி என்று பெருமை கொள்ள முடியுமா என்று ஒரு நூற்பா இயற்றி நையாண்டி செய்தார்.

அன்றியும், தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள்

ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ

அன்றியும் ஐந்தெழுத் தால்ஒரு பாடை என்று

அறையவே நாணுவர் அறிவுடை யோரே

ஆகையால் யானும் அதுவே அறிக.'

இலக்கணக் கொத்துரை பாயிரம் 7)

வ்வாறு சுவாமிநாத தேசிகர் வடமொழி தமிழ் ஆகிய இரண்டற்கும் பொதுவான எழுத்துகள் வை என்று கணக்கிட்டு அவை எல்லாம் வடமொழிக்கே சொந்தமானவை என்று தவறாக முடிவு செய்து ஐந்தெழுத்தால் ஒரு பாடைஎன்று அறையவே நாணுவர் அறிவுடையோரே என்றும், “அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ" என்று சொல்லி நகையாடியது அவர்தம் தவறான மனப்பாங்கைக் காட்டுவதாகும். தனித்தமிழ் உண்டோ என்று அவர் வினவியது மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டது எனலாம்.

அமைதியாக உள்ள

- பெ.கு. உலகநாதன் எம்.ஏ.எம்.லிட். துணைப்பேராசிரியர், தமிழ்த் துறை சென்னைக் கிறித்தவக் கல்லூரி

காற்று வள்ளம் மிகவும் அழகுடையதாயிருத்தல் போல, அமைதியாக இருப்பவர் அறிவானது மிகவும் ஆழ்ந்து செல்லுந் திறத்ததாய் தெளிவாய் இருக்கும்.

மறைமலையடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/301&oldid=1585565" இலிருந்து மீள்விக்கப்பட்டது