உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

  • மறைமலையம் -18

இஞ்ஞான்று பலவகைப்பட்ட நூல்கள் எழுதுவாரும் நூல்கட்கு உரை வகுப்பாரும் வடசொற்களையும் பிறசொற்களையும் தாமெழுதும் தமிழில் ஒரு வரை துறையின்றிப் புகுத்தித் தமிழின் தீஞ்சுவையையும் அஃகா வளத்தையும் கலங்காத் தூய்மை யையும் பழுதுபடுத்தி அதனை அழித்து வருதல் கண்டும்;பொருள்களைத் தெரிந்தற்கு வேண்டிய அளவு சொற்கள் இல்லாமல் பலவகைக் குறைபாடுகள் உடையதாயிருக்கும் ஆங்கில மொழியைப் பிறமொழிக் கலப்பில்லாமல் வழங்குவது பெரிதும் வருத்தமே என்றாலும் அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் இயன்றமட்டும் அதனைத் தூய்மையாகவே வழங்க வேண்டுமென்று கட்டுரைத்து வருதல் கண்டும், மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்கவல்ல சொல்வளமும் பொருட் செழுமையும் உடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயன் மொழிச் சொற்களை அதன் இடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம்.”

இதிலிருந்து 1906-ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த "பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை” என்னும் நூலில் வடசொற்கள் கலந்து எழுதினார் என்றும் 1919-ஆம் ஆண்டில் வந்த அந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வட சொற்களை யெல்லாம் மாற்றிவிட்டதாகவும் அறிகின்றோம். இவ்வாறே முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலின் பின் வந்த பதிப்புகளில் வடசொற்களை மாற்றித் தனித்தமிழ் ஆக்கம் செய்தார்.

இலக்கணக் கொத்துரை' என்ற நூலை எழுதிய சுவாமிநாத தேசிகர் வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக் களையும் ஒப்பிட்டு வடமொழிக்கும், தமிழுக்கும் உயிர் எழுத்துக்களுள் பொதுவானவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்றும் தமிழுக்கே சிறப்பானவை எ, ஒ என்ற ரண்டும் என்று கணக்கிட்டு மெய் எழுத்துக்களுள் க, ச, ட, த, ப, ங, ஞ, ண, ந, ம; ய, ர, ல, வ, ள என்பவை பொதுவானவை என்றும் ற, ன, ழ என்ற மூன்று எழுத்துகளும் சிறப்பானவை என்றும் கணித்து வடமொழியில் இல்லாத இவ்வைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/300&oldid=1585564" இலிருந்து மீள்விக்கப்பட்டது