உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

மறைமலை அடிகளாரின் புலமையும் தொண்டும்

பரிதிமால் கலைஞர் நம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக ருந்தபோது தமிழாசிரியர் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்விற்கு மறைமலை அடிகளார் வந்திருந்தார். பரிதிமால் கலைஞர் அடிகளாரின் இலக்கண அறிவின் ஆழத்தைக் காண்பதற்காக முற்றியலுகரத்திற்கும் குற்றியலு கரத்திற்கும் எடுத்துக் காட்டுகள் தரும்படி வினவினார். அடிகளார் தயக்கமின்றி ‘அது தெரியாது’ என்று பதிலிறுத்தார். பரிதிமால் கலைஞர் அடிகளாரின் அறிவு நுட்பத்தைப் பாராட்டித் ட தமிழாசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று அவரைத் தேர்ந்தார். அது என்பது முற்றியலுகரம்; தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். ‘அது தெரியாது' என்ற விடையிலேயே முற்றியலுகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுகள் தந்த அடிகளாரின் புலமை போற்றத் தக்கதாகும்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி இன்று 60 ஆண்டுகள் ஆகின்றன. அடிகளார் தாம் எழுதிய ‘பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை' என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் முகவுரையில் தனித்தமிழில் தாம் எழுதவேண்டி நேர்ந்ததைப் பின்வருமாறு உணர்த்தியுள்ளார்.

.

இப்பதிப்பின்கண் மற்றொரு முதன்மையான மாறுதல் செய்திருக்கின்றேம். பெரும்பாலும் வடமொழி புகுதாமல் தனித்தமிழ் நடையில் நூல்கள் எழுதுவதே எமக்கு இயற்கை என்றாலும், வடசொற்களை அறக்களைய வேண்டுமென்னும் கடைப்பிடி எமதுள்ளத்தில் முன்னிருந்ததில்லை. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/299&oldid=1585563" இலிருந்து மீள்விக்கப்பட்டது