உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் -18

பழமைமிகு தமிழ்நெறியைப் பகுத்தறிவும்,

அறிவியலும் பரந்து யர்ந்த

விழுமியநற் பெரும்போக்கும், விரிந்தமனப் பான்மையுமே மேவு வித்துச்

செழுமியநல் அடிப்படையில் சிறந்தநல்ல

அமைப்போடும் செழிக்கச் செய்தார்!

தொழுதகைய பெரும்புலவர், தூயதமிழ்

மறைமலையார்! சொல்வ தென்னே!

மறைத்திருவர், தமிழ்ச்சான்றோர், மறைமலைநல்

அடிகளார், மாட்சி வாய்ந்த

கிறித்தவநற் கல்லூரித் தமிழ்ப்பேரா

சிரியர்எனக் கீர்த்தி ஓங்க,

நெறித் தகுசீர்ப் பணிபுரிந்தார்! நிகரில் முல்லை,

பட்டினநீள் பா லைநூல்கள்

குறித்தரிய ஆராய்ச்சி உரைநூல்கள்

வெளியிட்டார்! கூறல் என்னே!

(6)

(7)

(வேறு)

தனித்தமிழ் இயக்கத் தந்தை!

சைவசித் தாந்தச் சான்றோர்!

முனைத்தநற் கொள்கை வீரர்!

மும்மொழிப் புலமை வேந்தர்!

மனித்தருள் தெய்வம் போன்ற

மறைமலை அடிகளார்தம்

எனைப்பல சிறப்பும் போற்றி

இனிதவர் நெறிநின் றுய்வாம்!

(8)

- திரு. ந. ரா. முருகவேள் ஆசிரியர் “திருக்கோயில்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/298&oldid=1585562" இலிருந்து மீள்விக்கப்பட்டது