உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

ஆங்கிலமும் தீந்தமிழும் ஆரியமும் ஆய்ந்துணர்ந்த அறிஞர் ஏறு!

பாங்குமிகப் பல்கலைகள் பயின்றுணர்ந்தோர்! சிறந்துயர்ந்த பண்பின் மிக்கோர்!

தேங்குபெருங் கடல்கடந்த சேணாட்டும் புகழ்பொறித்த ஞானச் செல்வர்!

ஈங்கெவர்தாம் மறைமலையாம் எம்அடிகள் சிறப்பை எல்லாம் இயம்ப வல்லார்?

நற்பேரும் புகழுமிகு மறைமலையார்

தம்முடைய நலமே சான்ற

சொற்போரின் பேராற்றல், துணிவுமிகு

பேராண்மை, தூய நல்ல

முற்போக்குப் பெருங்கொள்கை, முறைதிறம்பா

ஆராய்ச்சி, எல்லாம் முன்னின்,

மற்றவர்க்கு நிகரான மாபுலவர்

எவருமிலர்! வாய்மை ஈதே!

உரனாற்றும் பெரும்புலவர்! உரைத்திட்பம், மொழிபெயர்க்கும் ஒப்பில் ஆற்றல்,

வரலாற்றின் பேருணர்வு, மறுப்பெழுதும் நன்மாட்சி, மற்றும் எல்லாம்

தரலாற்றும் மறைமலையார் தனித்தமிழ்நற் பெருநூல்கள் தகவின் என்றால்,

நிரலாற்றின் மறைமலையார் நிகரில்பெருஞ் சிறப்பெல்லாம் நிகழ்த்தற் காமோ?

தனித் தமிழ்நற் பெருவழக்காம் தமிழ்வளரத்

தக்கவழி, தகவே கண்டு

முனைத்துவந்த பலஎதிர்ப்பும் முன்னாது,

முயன்றுமிக வெற்றி யுற்றார்!

அனைத்தறிஞர் இளைஞரெல்லாம் மறைமலையார்

ஆராய்ச்சி அருமை, இன்று

நினைத்துணர்ந்து போற்றுகின்றார்! நிகழ்த்தினர்இப்

பெரும்புரட்சி! நெடிது வாழி!

265

(2)

(3)

(4)

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/297&oldid=1585560" இலிருந்து மீள்விக்கப்பட்டது