உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

  • மறைமலையம் -18

அடிகளார் திருத்தங்கள் வாழ்க! வெல்க!

இறைவன் படைப்பில் இறையுங் குறையாங்

கறையே திவன்செயலல் லால்.

மறைமலையடிகளார்.

தமிழ்த் ஆதூய்மை

தமிழ் முன்னோர் தமது தாய்மொழியைப் பிற மொழிக் கலப்பின்றித் தூயதாய் எல்லா வளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறு போல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ் மொழியைத் தூயதாய் வளனுறு வளர்த்து வருதல் வேண்டும். தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவுபெற வளர்த்துப்பெருமைப்படுத்திய தமிழைச் சீர் குலைக்கும் போலித் தமிழ்ப் புலவரைப் பின்பற்றி நடவாமல் தமிழையுள்ளன்புடன் ஓம்பித் தூயதாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலிற் றமிழ் நன் மாணவர் அனைவருங் கருத்தாயிருத்தல் வேண்டும்.

மறைமலையடிகளார்

மறைமலை அடிகளார் நெறி நின்றுய்வோம்!

செந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த திருப்புதல்வர்!

இணையின்றிச் சிறந்து யர்ந்த

நந்தலிலாப் பெரும்புலவர்! நாவலவர்!

தமிழரெலாம் நயந்து போற்ற

முந்துறுநற் பெருந்தலைவர்! மூதறிவும்

இளம்வீறும் முதிர்ந்த தோன்றல்!

அந்தமிலாப் பெரும்புலமை அமைந்தமறை மலையடிகள் போல்வார், யாரே?

(1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/296&oldid=1585559" இலிருந்து மீள்விக்கப்பட்டது