உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

263

அடிகளார் செய்த இந்த இயக்கத்தால், தமிழ் இலக்கியங் களே ஒரு தனிநிலை எய்தின; மக்களும் உணர்ச்சி மிகுந்தனர்; ‘உலகத் தமிழ் மாநாடுகள்’ நிகழ்ந்து, 'உலக நாடுகள்' கூட ஒற்றுமை யுற்றன.

சிவ சமய நெறி, தமிழ் நெறியென்றே உலக முழுதும் உணரப்பட்டது. உலக மொழிகளில் தமிழே மிகப் பழமையான தென்பதும், கலைகளும், நாகரிகமும், மெய்ம்மை இனிமை களும், வாழ்க்கை யியலும், இயற்கை மாட்சியும், நலங்கள் பலவும், மொழி யுயர்வில் விளங்குவன என்பதும், தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி' என்பதும், முற்காலத்தில் இந்தியாவும் சூழல் தீவுகளுமாகிய நாவலந் தீவு முழுதும், தமிழ் மொழியும் தமிழ் நெறியாகிய சிவசமயமும் திகழ்ந்தன என்பதும், தெளிவாகவும் உறுதியாகவும் முடிவாகிக் கடைப்பிடிக்கப்

பட்ட ன.

‘சன்மார்க்கப்' பொது நெறி, சிவ நெறிக்குரியதே என்பதும், சிவ சமயம் குருமாரால் பரப்பப்பட்டதே யன்றித் தோற்று விக்கப்பட்டதன்று என்பதும் நன்கு விளங்கின.

எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைத் தொழுவதே எல்லாவற்றிற்கும் நன்று என்னும் கொள்கை சைவர்க்குள் நிலைபெற்றது; சிறு தேவதைகளுக்குச் சிற்றுயிர்களைப் பலியிடுதலும் நீங்கியது. சிறு தேவதை வழிபாடுகளும் குறைந்து, ஒரு தெய்வ வணக்கமே ஓங்கியது; சைவர்களுக்குள் சாதிபேதம் பாராட்டாமை, தீண்டாமைத் தடுப்பு, தாழ்த்தப்பட்டவர்களை மேல் உயர்த்தல் முதலிய திருத்தங்களெல்லாம் பெருகின.

ஆசிரியர் மறைமலையடிகளாரால் தமிழ் நாகரிகமும் தமிழ்மொழியும் சிவ நெறிப் பொதுமையும், சிறப்பும், எத்தனையோ வகைகளில் எவ்வளவோ மேம்பட்டன என்று ன சொல்லலாம். புதிய கருத்துக்களும், ஆராய்ச்சிகளும், முறைமை களும், நுட்பங்களும், வரையறைகளும் நடைமுறைகளும் பொலிவுற்றன.

அடிகளார் நெறியை நாடு எவ்வளவுக்கெவ்வளவு பின்பற்றுகிறதோ அவ்வளவும் அது உலகப் புகழ் எய்தி மேம்படும் என்பதில் ஐயமில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/295&oldid=1585558" இலிருந்து மீள்விக்கப்பட்டது