உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 18

நலங்களை வெற்றுக் கோலங்களாய் எழுதுவதே புலமைச் சிறப்பென்று பலருங் கருதினர்.

மகளிர் நிலை அடிமைப்பாடாய் இருந்தது. கல்வி குறைவு; புற உலக நிலைகள் பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்ப தில்லை. சிறுபருவத் திருமணங்கள் கிளைத்து வந்தன; இளம்பருவக் கைம்பெண்கள் கலங்கி நின்றனர்.

தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தனர். சாதி பேதம் மிக்கிருந்தது; தேவார திருவாசகங்கள் அறிவுரைகள் கூறியும், கீழ்மைகள் தாண்டவமாடின.

ஆசிரியர் மறைமலையடிகளார் இந்நிலைமைகளை ஆ யெல்லாம் தம் வாழ்நாளில் திருத்தி யுதவினார். பொய்ம்மையும் குருட்டுப் பிடியுமாகத் தோன்றியவை அனைத்திலும் நாட்டுக்கு விடுதலை தேடினார்; விஞ்ஞான மனப்பான்மை விரிந்தது, நூல்களாலும் விரிவுரைகளாலும் அறிவுரைகளாலும் மட்டு மன்று, தம் வாழ்க்கையினாலும், கண்கூடாக வாழ்ந்து காட்டி னார்; மெய்ஞ்ஞானத் திறத்திலும் மிளிர்ந்து விளங்கினார்; செயலில் வந்தமையால் மக்கள் கட்டுண்டனர்; அஞ்சாமலும் மனச் சான்றின்படியும் பணியாற்றினார்.

தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது என்பதை ஓர் இயக்கமாக அடிகள் நடத்திக் காட்டினர். வாழக்கையின் முற்பகுதியில், அயல் மொழிக் கலப்பில் எழுதியவற்றை 1916-ம் ஆண்டுக்குப்பின் தனித் தமிழிலேயே திருத்தி வெளியிட்டார். அதன் பின் எழுதிய எல்லா நூல்களும் தனித் தமிழிலேயே எழுதப்பட்டு வெளிவந்தன. எழுத்து நடையிலும் பேச்சு நடையிலும் எல்லாம் தனித் தமிழே; வீட்டுப் பேச்சுகள்கூடத் தனித் தமிழாகவே இருந்தன. மாணவர்கள் தமிழுணர்ச்சியை அங்கங்கும் பரவச் செய்தனர். தனித்தமிழ் இயக்கம் எங்கும் மலரலாயிற்று. நாடு முழுதும் அடிகளாரின் அழகிய தமிழ் நடையையும், அதில் அவர்கள் பெற்ற வெற்றிச் சிறப்பையும் எல்லாரும் கண்டு தாமும் அவ்வாறே தனித்தமிழில் எழுதத் தொடங்கினர். பேசத் தொடங்கினர். தெருப் பெயர், இல்லப் பெயர், மக்கட் பெயர்கள், உணர்ச்சியோடும் துடிப்போடும் தமிழாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/294&oldid=1585557" இலிருந்து மீள்விக்கப்பட்டது