உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

261

செய்து, தமிழில் அழகிய அரிய ஆராய்ச்சிகளுக்கும் கலை களுக்கும் அருளுக்கும் உரிய நூல்களை இயற்றி, எல்லார்க்கும் இனியராய் ஒழுகி, 1950-ல் தமது 75-ம் ஆண்டில் மறைந்த தமிழ்ப் பெரியார், குரவர் மறைமலையடிகளார் ஆவர். இஞ்ஞான்று மிளிரும் சென்னைப் பழம் பெருஞ் 'சபை' யாகிய 'சைவ சித்தாந்த மா சமாச' மும் 1905-ல் அடிகளார் தோற்றியதே.

அவர்கள் தோன்றிய காலத்தில், நாட்டில் ஆராய்ச்சி நிலை போதாது; வரலாறு, கலை முதலியவற்றில், மெய்ப் பொருள் தேறாத முடிவுகள், பல.

பல மொழிகளும் கலந்த கலப்புத் தமிழ் மிகுந்திருந்தது. சமக்கிருதத்திலிருந்து தமிழ் தோன்றியது என்றே பெரும் பாலோர் எண்ணி வந்தனர். சமக்கிருத வேதங்களே பழமை யானவை அவற்றின்படியே தமிழ் நூல்கள் பலவும் அமைந்தன என்றும், சமக்கிருதத்தின் மொழி பெயர்ப்புகளாகத் திருக்குறள் திருமந்திரம்', 'சிவஞான போதம்' பெரிய புராணம், முதலிய பெரு நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டன என்றும், அறிஞரிற் பலர் நினைவு கொண்டிருந்தனர்.

தமிழ்ப் புலவர்களின் நிலை இரங்கத்தக்கதாய் இருந்தது; அவர்கள் எழுதும் நூல்களுக்கும் செய்யும் விரிவுரைகளுக்கும் போதிய பொருள் கிடைப்பதில்லை.

விரிவுரை மேடைகள் பெரும்பாலும் ‘புராணப் பிரசங்க 'மேடைகளாய், 'இசைக் கதை சைக் கதை' மேடைகளாய் இருந்தன. அவர்களுக்கு வரலாற்றுக் கண் குறைவு. தமிழ் நூல்களுக்கும் சமக்கிருத நூல்களுக்கும் கால ஆராய்ச்சியும் போதாது கல்வெட்டு ஆராய்ச்சியும் போதா.

தமிழ் நடை பொது மக்களுக்குப் புரியாத நிலையிலும் அழகு கெழுமாத நிலையிலும் இருந்தது. புலவர்கள் தத்தம் சிறப்பைக் காட்டும் பொருட்டு இலக்கணக் குறிப்புக்களையே மிகுதியாகத் தழுவினர். கருத்துக்கள் பொதுமக்கள் பின்பற்றத் தக்கனவாக அமையவில்லை. 'கற்பனை' என்பது ‘பொய்ப் புனைவு' என்னும் பொருளில் இயங்கி வந்தது. முன்பின் முரண் வேறு; பொருள் நலங்களை மிகுக்காமல், வெறும் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/293&oldid=1585555" இலிருந்து மீள்விக்கப்பட்டது