உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

  • மறைமலையம் -18

அல்லதூஉம், மொழிமுதலே நாவெழுத்துக்கள் தொடங்கி யுரைத்தற்கு வேண்டப்படும் அத்துணை முயற்சி, அவற்றை மொழியிடைப் படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னும் இரண்டனையுந் தெரிந்துரைத்துக் காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின் அச்சிறு முயற்சியாற் பிற்காலத்தே தோற்றமுற்று நடைபெறலுற்ற அந்நாவெழுத்துக்கள் பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லை யென்று விடுக்க. இது நிற்க.

இன்னுமிவ்வாறே தமிழின் கட் காணப்படும் பல நுட்ப வேதுக்களால் தமிழ்மொழி மற்றெல்லாச் சொற்களினும் பழைமைதாமாறு சமயம் நேர்ந்துழி யெல்லாம் விரித்து விளக்கு வாம். நமக்கு உற்ற நண்பர்களாயுள்ள புலவர் மாமணிகளுந் தாந்தாம் ஆராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும்படி அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(அடிகளார் 1902ம் ஆண்டில் தமது அறிவுக்கடல் என்னும் திங்களிதழில் எழுதியது.)

66

அறிவின் ஏற்றத் தாழ்வு கண்டு, உயிரினங்களை ஆறுவகையில் அடுக்கிக் காட்டிய மிகப் பழைய நூல் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியத்தைத் தவிர வேறெந்தப் பழைய நூலிலும் இல்லாமை கருத்திற் பதிக்கற்பாலது"

மறைமலையடிகளார்

மறைமலையடிகளார் திருத்தங்கள்

(திருக்குறள் பீடம் குருகுலம் அழகரடிகள்)

1876-ல் நாகையில் தோன்றிச் சென்னையில் கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியராய்த் திகழ்ந்து, 1911-ல் பல்லாவரத்தில் நிலையாய்க் குடிபுகுந்து, 'பொதுநிலைக் கழகம்’ ‘மணிமொழி நூல் நிலையம்' 'அம்பலவாணர் அம்மை திருக்கோயில்'

பாது நெறித் திருமடம்' முதலியன நிறுவித், தமிழ் நாடெங்கும் இலங்கையிலும் தமிழும் சிவநெறியும் பரவச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/292&oldid=1585554" இலிருந்து மீள்விக்கப்பட்டது