உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

271

ஆங்கிலத்திலும் தமிழ் நூல்களில் தமிழிலும் அவர் பெயர் பொறிப்பார். அதையொட்டி அந்நூல் வாங்கப்பெற்ற நாள் குறிக்கப்பெற்றிருக்கும்.

அடிகளார் நூல் பயிலும் முறையே தனிச் சிறப்புடையதாகும். தமக்கு விருப்பமான பகுதிகளைப் பக்கக் கோடிட்டுக் காட்டுவார். வரிகளை அடிக் கோடிடுவார். பக்கத்தில் அடிகளுடைய குறிப்பு அழகிய எழுத்துக்களில் மிளிரும் சிறந்த பகுதிகளுக்கு Note என்று எழுதுவார். தமக்கு ஒத்த கருத்துள்ள பகுதிகளை yes என்றும் true என்றும் தவறான கருத்துக்களை wrong என்றும் false என்றும் குறிப்பிடுவார். ஐயப்படும் இடங்களில் ஐயக் குறிகளும் வியப்பைக் குறிக்க வியப்புக் குறியும் இடப்பெற்றிருக்கும். வேறு நூல்களுடன் ஒத்த கருத்துள்ள பகுதிகளைக் குறித்து அதனருகில் ct என்று குறித்து எந்த நூலை அல்லது கருத்தை ஒத்திருக்கிறது என்றும் குறிப்பிடுவார்.

L

க்டர் உ.வே. சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை முதன் முதல் 1892-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். அதனை அடிகளார் தொடக்க முதல் இறுதிகாறும் பக்கம் பக்கமாக, வரி வரியாக முறையாகப் படித்துப் பக்கந்தோறும் பல இடங்களில் பல்வேறு குறிப்புகளைக் குறித்துள்ளார். அடிகளார் எல்லா நூல்களையும் இம்முறையில்தான் பயின்றுள்ளார் என்று பார்த்தால் அவர் நூல்களைப் பயிலும் முறையை நன்கறிந்து கொள்ளலாம்.

சாலினி-

நூலில் அரிய சொற்கள் பயின்று வரும் இடங்களிளெல்லாம் அவற்றிற்குப் பொருள் எழுதியுள்ளார். தேவர்க்காடுபவள்:பாகுடம்-அரசிறை.

சில சொற்களுக்கு விரிவான விளக்கமும் கொடுத்துள்ளார். சல்லியகரணி - கருவிப் பட்ட காயம்; ஆற்று மருந்து; சந்தான கரணி - முறிந்த உறுப்புக்களை யிணைக்கும் மருந்து; சமனிய கரணி - எழில் கழிந்த உறுப்புக்களை எழில் கெழுவிப்பது; மிருத - 6 சஞ்சீவினி றந்த உயிரை மீளக் கொடுவந்து உடலிற் பொருத்துவிப்பது.

ஆங்காங்கு இலக்கணக் குறிப்புகளை எழுதியுள்ளார். 'திங்கண் மாலை' என்ற பாடலுக்கு ‘திங்கள் முதலிய மூன்று மிடைம

க்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/303&oldid=1585567" இலிருந்து மீள்விக்கப்பட்டது