உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

  • மறைமலையம் -18

வந்தன' என்று குறிப்புத் தந்துள்ளார். கௌசிகன் என்ற பெயர் 'கோசிகன்' என்று மாறுவதற்கு அடிகள் தந்துள்ள இலக்கணக் குறிப்பு வருமாறு: ஒற்றெழுத்துக்களோடு தொடரப் பெறாத ஒளகாரத்தை முதலாகவுடைய சில வடமொழிப் பதங்கள் தமிழில் வருங்கால் அவ்வௌகாரம் ஓகாரமாகத் திரியும்."

மூலப்பாடத்தை விட வேறு பாடம் சிறப்பாயிருப்பின் அவற்றை எடுத்துக் கொள்கிறார். மனையறம் படுத்த காதையில் (வரி 81) ‘பேரியற் கிழத்தி' என்ற தொடருக்குப் ‘பேரிற் கிழத்தி’ என்ற அரும்பதவுரைகாரர் பாடத்தைச் சிறப்பாகக் கொள்கிறார்.

பெருங்கதைப் பாடல் ஒன்று மேற்கோளாகக் காட்டப்படும் இடத்தில் ‘பகைத்தீயெறிப்ப' என்று தரப்பட்டுள்ளது. அடிகள் எரிப்ப என்று திருத்தம் செய்துள்ளார். ஆனால், உ.வே.சா.வின் 'பெருங்கதை' பதிப்பிலும் ‘எறிப்ப' என்றே கொடுக்கப் பட்டுள்ளது. தீ எரிக்கத்தானே செய்யும். எறிப்ப என்பது பொருந்தாதுதானே.

இளங்கோவடிகள் ஒரே வரியை மீண்டும் மீண்டும் சிலம்பில் பயன்படுத்தும் இடங்களை அடிகள் சுட்டிக் காட்டுகிறார். 'கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்' என்ற வரி கடலாடு காதை (வரி 130)யிலும் இந்திர விழவூரெடுத்த காதை (வரி 18) யிலும் வருவதை ‘அக்காதையின் இங்ஙனமே கூறினார்' என்று குறிக்கிறார். 'புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும்' என்ற வரிகள் இந்திரவிழவூரெடுத்த காதை (68-69) யிலும் வேட்டுவ வரி (37-38) யிலும் பயின்று வந்துள்ளதைச் சுட்டுகிறார்.

L

உரைப்பகுதியில் தமக்குப்பிடித்த பகுதிகளைச் 'சிறந்தது’ என்றும் பிடிக்காத இடங்களைச் 'சிறந்ததன்று’ என்றும் பொருத்தமற்ற இட ங்களைப் போலியுரை’ என்றும் குறிப்பிடுகிறார்.

கானல்வரி (வரி17)யில் அடியார்க்கு நல்லார் 'முலைகளோ பாரமாக உள்ளன. ஆதலால் கொல்லுதலைத் தவிர்த்து அப்பாரத்தை என் தோளிலேற்றி இடையைப் பாதுகாப்பாயாக'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/304&oldid=1585568" இலிருந்து மீள்விக்கப்பட்டது