உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

273

என்று எழுதியுள்ள உரையை 'இவ்வுரை சிறந்தது' என்று அடிகள் பாராட்டுகிறார்.

'தேம்பழம்' என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் 'தேனொழுகும் பலாப்பழம்' என்று உரை யெழுதிய பின் ‘தெங்கம்பழம் எனினும் அமையும் என்கிறார்.' 'இப்பொருள் பொருளை

சிறந்ததன்று என அடிகள் இரண்டாவது

மறுக்கிறார்.' 'கோழிச் சேவற் கொடியோன் கோட்டம் (ஊர்காண், 10) என்ற அடிக்குக் குறிப்பு எழுதும் அடிகளார் முருகக் கோயிலையுங் கோட்ட மென்றுரைத்த பின்’ மென் குணவாயிற் கோட்டம்’ ‘என்புழிக்' கோட்டமென்பது அருகன் கோயிலாமென்றிவ் வுரையாசிரியர் பொருளுரைத்தது போலியாமென்றொழிக” என்று கண்டிக்கிறார்.

மேற்கோள் சுட்டப்பெறாத இடங்களில் அடிகளே இடஞ் சுட்டிக்காட்டுகிறார். ஊர் காண் காதை (70-75) வரிகளுக்கு உள்ள உரையில் “நாணும் மடனும் பெண்மையவாதலின்” என்ற தொடர் உள்ளது. உ.வே.சா. இதற்கு மேற்கோள் காட்டவில்லை. அடிகள் இவ்வரியை மேற்கோள் அடைப்புக்குள் அடக்கி “தொல் பொருள், களவியல், 'காமத்திணையிற் கண்ணின்று வரூஉம்'எனச் சூத்திரம்' என்று அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார். அச் சூத்திரத்தில் இவ்வரி வந்துள்ளது.

ஒப்புமைப் பகுதிகள் கொடுக்கப் பெறாத பல விடங்களுக்கு அடிகள் பல்வேறு நூல்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

ஊர்காண் காதை (வரி 72)யில் உள்ள ‘வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை' என்ற வரிக்கு ஒப்புமைப் பகுதி எதுவும் பதிப்பில் இடம் பெறவில்லை. அடிகள் அடிக் குறிப்பிட்டு ‘திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை' என்றார் கலித்தொகை யினும்” என்று எழுதியுள்ளார்.

கொடுக்கப்பெற்றுள்ள அடிக்குறிப்பு தவறாக இருப்பின் அடிகள் தயங்காது சுட்டிக் காட்டுகிறார். கட்டுரை காதையில் (வரி 55) ‘பெருஞ்சோறு பயந்த திருந்து வேற்றடக்கை' என்ற வரிக்கு உ.வே.சா. “பாண்டவரும் துரியோதனாதியரும் போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/305&oldid=1585569" இலிருந்து மீள்விக்கப்பட்டது