உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 18

புரிந்த காலத்தில் அவர் சேனைக்குச் சோழனொருவன் சோறிட்டானாதலின் பெருஞ்சோறு பயந்த திருந்து வேற்றடக்கை' என்றார்; இதனைப் புறப்பாட்டாலுணர்க! என்று அடிக் குறிப்புத் தந்துள்ளார்.

தனைக் கண்ணுற்ற அடிகளார் இப்பகுதியை மையால் குறுக்குக் கோடிட்டு அடித்து விட்டு “புறநானூற்றிலிங்ஙனஞ் சோறு பயந்தான் 'உதியஞ் சேரலாதன்' என்று கூறப்பட்டது என்று பக்கக் குறிப்பு எழுதியுள்ளார். பெருஞ்சோறு பயந்தவன் சேரன் என்பதற்கு மாறாகச் சோழன் என்று முதற் பதிப்பில் காடுத்துவிட்ட உ.வே.சா. இரண்டாம் பதிப்பில் இதனைத் திருத்திவிட்டார்.

ஊர்காண் காதை (வரி 7)யில் ‘நுதல் விழி நாட்டத் திறையோன் கோயிலும்' என்ற வரிக்கு அடிகளார் எழுதியுள்ள அடிக்குறிப்பு இளங்கோவடிகளின் சமயத்தைப் பற்றி அவர் என்ன கருதினார் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்து கின்றது.

"பிறப் பிறப்பில்லாப் பெரியோன்" என இந்திர விழவூரெடுத்த காதையிற் கூறுதலானும், பிறாண்டும் 'சிவ பெருமானையே முதற்கட் கூறுதலானும் ஆசிரியர் இளங்கோ வடிகள் சைவரே யாமென்பது பெற்றாம்”.

அடிகளின் இக்கருத்து க்கருத்து உ.வே.சா.அவர்கட்கும் வி.ஆ. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களுக்கும் உடன்பாடாம் எனினும் இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று இன்று பெரும்பாலோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைமலையடிகளார் சிலப்பதிகாரத்தைச் செம்மையாகப் படித்துப் பல பயனுள்ள குறிப்புகளை ங்காங்கே கொடுத்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்வோர்க்கு அடிகள் பயன்படுத்திய இந்நூல் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இரா. முத்துக்குமாரசாமி எம்.ஏ.பி.லிப் நூலகர், மறைமலையடிகள் நூலகம், சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/306&oldid=1585570" இலிருந்து மீள்விக்கப்பட்டது