உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

அகரவொலியும் ஆகாரவொலியும்

275

சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறை வனியல்பை அகரவொலி காட்டாநிற்ப. உலகுயிர்களை இயக்கி அவ் வியக்கத்தால் தன்னிலையைப் புலப்படுத்தி ஐந்தொழி லியற்றும் முதல்வனியல்பை ஆகாரவொலி குறிப்பிடா நிற்குமென்க.

மறைமலையடிகள்

மறைமலையடிகளார் ஒரு மறையாத மலை

(வண்கை ஒத்தாழிசைக் கலிப்பா)

(தரவு)

மறையாத மலையொன்று மறைமலை என்று

துறைமேவு தூயதமிழ் துலங்கிட நின்று

பொறைதாங்கி மற்றுமொரு பொதியமே யாகிக்

கறையற்ற தமிழ்தந்த காட்சியே காட்சி!

(தாழிசை மூன்று)

மன்னிய கலைகளிலே மகிழ்பல துறைமேவும் சென்னைக் கிறித்தவக்கல் லூரியில் சிறப்புடனே முன்னர் பணிசெய்த முனிவரைப் போற்றுகின்றோம்! மறைமலை யடிகளென்றால் மக்களின் மனத்திலுள்ள கறைமலை கரைந்துபோகும் கன்றிய தமிழ்ப்பகையின் சிறகறுத் தெறிந்ததாலே! செந்தமிழ் வாழ்ந்ததாலே!

நாடக நூல்களென்ன! நயந்தநல் கட்டுரைகள் ஏடகம் கொண்டபல நூல்களின் ஏற்றமென்ன! தோடக மாலையிட்டுத் தோத்திரம் சொல்லுகின்றோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/307&oldid=1585571" இலிருந்து மீள்விக்கப்பட்டது