உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 18 (அராகம்)

இமயமலை எழிலார்ந்த பொதியமலை எங்கணும் குளிர்சேர்ந்த நீலமலை சமயமலை வரிசைகளில் தணிகைமலை சாயாத சாமிமலை அழகர்மலை இமயமலை விந்தமலை சென்னிமலை

செஞ்சிமலை பறங்கிமலை எந்தமலையும்

கமலநிகர் மறைமலைக்கே ஈடென்று

காட்டுகிற கவினெங்கே காட்டுவீரே!

(இரண்டாம் போதரங்கம்)

பேசினால் செந்தமிழ் பேசியே தீரவேண்டும் கூசினால் - குறையெனத் தள்ளியே எள்ளவேண்டும் என்றொரு துணிவுடன் இயங்கிய புலவரேறு இன்றுநாம் தலைநிமிர்ந் திருந்திட வைத்தமேரு!

(அம்போதரங்கம் நாற்சீர் ஈரடி இரண்டு)

காளி தாசனின் கவினார்ந்த பெண்மணியைக் கன்னித் தமிழிலோர் கண்மணியாய்ப படைத்தளித்தாய்! சங்கத் தமிழிருந்த செந்தமிழ்சேர் நூல்களுக்குத் தங்கத் தமிழுரைகள் தந்ததிலே விஞ்சிநின்றாய்!

(முச்சீரோரடி நான்கு)

முற்றாகக் கற்றவன்நீ சைவத்தின்

நெற்றாக இருந்தவன்நீ தமிழைநல்ல

பற்றாகப் பிடித்தவன்நீ உன்எழுத்தை

விற்றாலும் உலகையெலாம் வாங்கலாமே!

துறவுநீ செந்தமிழர்

உறவுநீ தத்துவத்தின்

(இருசீரோரடி எட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/308&oldid=1585572" இலிருந்து மீள்விக்கப்பட்டது