உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் 18

6. இத்துறைகளில் ஆங்கிலமோ இந்தியோ கூடாது.

7. ஒரு சிலர் தாய்மொழியன்றிப் பிற மொழிப் பயிற்சிகளை ஆராய்ச்சிக்காக மேற்கொள்ளலாம்.

அரசியற் கருத்துக்கள்

1. ஏழை எளியவர்கள் என்றில்லாமல் மக்கள் அனைவரும் எல்லா வாழ்க்கை நலங்களையும் வளமாகத் துய்த்தற்கான நல்லரசு அமைதல்வேண்டும் (பொதுவுடைமை போன்றது)

2. அரசியற் கொள்கைகளால் தமிழ் மக்கள் தம்முள் கருத்து வேறுபாடு கொள்ளல் கூடும். ஆயினும், மேற்கூறிய தமிழர்தம் கடவுட்கொள்கை, மன்பதைக் கொள்கை, மொழிக் கொள்கை களில் மாறுபாடு கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/318&oldid=1585582" இலிருந்து மீள்விக்கப்பட்டது