உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

80

மறைமலையம் 19

சென்னையிலேயே

பின்னர் இன்றைக்குச் சிறிதேறக்குறைய 23 ஆண்டு களுக்குமுன், எம்மாணவர் நாகை. கேபாலகிருட்டிணன் வாயிலாகத் திருநாவுக்கரசு எம்மை வந்து அடுத்தனர். அப்போது யாம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தமையாற், குடியிருப்புக் கொண்டிருந்தேம். கோபாலகிருட்டிணனுந் தாமுமாகச் சில நாட்கள் சில நாட்கள் இவர் எம்மை வந்து கண்டு வருகையில், தமிழிலுள்ள பழைய செந்தமிழ் நூல்களை எம்பால் முறையாகக் கற்க வேண்டுமென்னுந் தமது விருப்பத்தைக் கோபாலகிருட்டிணன் வாயிலாக எமக்கு மெல்லெனப் புலப்படுத்தினார். அது தெரிந்து யாம் “ஆங்கிலங் கற்கின்ற மாணவர் தமிழ்நூல்களை மிகுதியுங் கற்பாராயின், தமிழ்நூற் சுவை ஆங்கில நூற்பயிற்சியைத் தடை செய்யும்; ஆதலால், ஆங்கிலத்தை மிகுதியாகவுந் தமிழைச் சிறிதாகவும் பயின்று, ஆங்கிலப் புலமையை முற்றுவித்துக் கொண்ட பின் தமிழை மிகக் கற்றலே வேண்டற்பாலது”, என்றேம். அதன்மேல், இவர் ஆங்கிலம் நீளப் பயிலுதற்கு ஏற்ற வசதிகள் பயவாத தமது வறிய நிலைமையினையும், தமிழ் கற்றாவது அறிவு பெறவேண்டுமெனத் தமக்குள் அடங்காது எழும் அவாவினையும் எமக்குத் தெரிவித்தனர். இவர் அவைகளைத் தெரிவித்த முறையானது, எமது நெஞ்சத்தை இளகச் செய்து, அப்போதே இவர்பால் எமக்கு மிக்க அன்பினைத் தோற்றுவித்தது. இவர் வேண்டுகோளுக்கும் சையலானேம். அது முதல் இவருங் கோபாலகிருட் டிணனும் ஒருங்கு சேர்ந்து, 'திருமுருகாற்றுப் படை'யும் ‘நன்னூலும்’ துவங்கி அவையும் பிறவும் ஒழுங்காக எம்பாற் பாடங்கேட்டு வரலாயினர்.

இருவரும் நுண்ணுணர்வுடையராகக் காணப்படினும், கோபாலகிருட்டிணனுக்கு எழுதும் ஆற்றலே மிகுதியா யுளதென்பதும், திருநாவுக்கரசுக்கு எழுதும் ஆற்றலொடு பேசும் ஆற்றலும் ஒப்ப உளதென்பதும், அப்போதே புலப்படலாயின. இவ்விருவர்க்கும் உள்ள அவ்வேற்றியல்பு, இவர்கள் வளர்ந்து பெரியரான பின்றான் வெள்ளிடைமலை போல விளங்கலாயிற்று. கோபாலகிருட்டிணன் பொருள் பொதிந்த இனிய செந்தமிழ்க் கட்டுரைகள் எழுதுவதிலும், புதிய கதைகள் அமைப்பதிலும் மிக்கு விளங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/113&oldid=1585705" இலிருந்து மீள்விக்கப்பட்டது