உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

79

மறைந்தால் திரும்பவும் அதனை யொப்ப தொன்றனைப் பெறுதல் இயலுமோ? அது போலவே, இவ்வருமைத் தமிழ் மகனாரை யொப்பார் ஓர் இளைஞரைத் திரும்பவும் யாம் பெறக் கிடைப்பது அரிதரிது!

இவர் 1888 ஆம் ஆண்டு இவர்தம் பெற்றோர் ஆற்றிய தவத்தின் பயனாய்ச், செங்கற்பட்டு மாகாணத்தில் உள்ள மணிமங்கலம் என்னும் ஊரிற் பிறந்தார். இ வரு ன் பிறந்தாரில் வர்தம் தம்பியரான தம்பியரான திருஞானசம்பந்த முதலியாருங் கோடீசுவர முதலியாருங் கல்வியிலுந் தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பதிலுங் சிறந்து திகழ்கின்றார்கள். பின்னவரான கோடீசுவரர் பி. ஏ., எல். டி. என்னும் ஆங்கிலப் பட்டமும் பெற்றுக் கோவிந்தப்ப நாயகர் கல்விச் சாலைக்குத் தலைமையாசிரியராகவும் அமர்ந் திருக்கின்றார்.

தமது பிள்ளைமைப் பருவத்தே திருநாவுக்கரசு தம் தந்தையாரால் தமிழ் நூல்கள் கற்பிக்கப்பட்டுவந்ததுடன், ஆங்கிலக் கல்விச் சாலைகளிலுஞ் சேர்ந்து ஆங்கிலமுங் கற்று வந்தார். அக்காலங்களில் இவருக்குக் கல்வி பயிற்றி வந்த ஆசிரியர்க ளெல்லாரும் இவரது நுட்ப அறிவின் திறனையுங் கல்வி கற்பதில் இவர்க்குள்ள வர்க்குள்ள வேட்கையினைங் கண்டு பெரிதும் வியந்து இவரைப் பாராட்டி வந்தார்கள் எனவும், தமிழ் ஆங்கிலப் பாடங்கள் எல்லாவற்றிலும் இவர் தம்முடன் பயின்ற உடன் மாணக்கர் எல்லாரையும்விடத் திறமை மிக்க வராயிருந்தன ரெனவுங் கேள்வியுறுகின்றோம். ஆங்கிலக் கல்லூரியில் தொடர்பாகக் கலை பயின்று பட்டம் பெறுதற்குத் தக்க செல்வ வளம் இன்றி, இவர் வர் சிறு பருவத்திலேயே வறுமைப்பட்டமையாற் பத்தாவது வகுப்புவரையிற் பயின்று அதன்பின் கல்லூரிப் பயிற்சியை விட்டு நீங்கினார்.

அங்ஙனம் ஆங்கிலப் பயிற்சியைவிட நேர்ந்தாலும், தமிழ் நூல் கற்பதில் தமக்குள்ள அவா சிறிதும் நீங்காமல் வரவர வளர்ந்து வந்தமையால், இவர் சென்னையில் திரு பூவை கலியாணசுந்தர அடிகளைச் சார்ந்து தமிழ் நூல்கள் கற்று வந்தார்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/112&oldid=1585704" இலிருந்து மீள்விக்கப்பட்டது