உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

6. தமிழ்த் திருவாளர் மணி. திருநாவுக்கரசு

.

முதலியார்

ரு

நமது பாதுநிலைக் கழக முதன் மாணவரும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் ஆசிரியருமான மணி. திருநாவுக்கரசு முதலியார் நிகழும் வைகாசி க0 ஆம் நாள் சனிக்கிழமை (23 - 5- 1931) முற்பகலில் திடீரென இம்மண்ணுலக வாழ்வு நீத்து விண்ணுலகு புகுந்த செய்தி, த்தமிழ் நாட்டவர் எல்லாரையும் திடுக்கிடச் செய்து, அவர்க்குப் பெருந்துயரைத் தருவதொன்றாய் எங்கும் பரவலாயிற்று. முகிழ்த்து மணங் கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப் பூ அதனருமை யறியான் ஒருவனாற் கிள்ளி யெறியப்பட்டு அழிந்தாற் போலவும் மறை நிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுதற்கு ஏற்றி வைத்த ஒரு பேரோளி விளக்குச் சடுதியில் வீசிய சூறைக்காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்ட நாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வ னொருவனாற் கவர்ந்து காள்ளப்பட்டாற் போலவும், இத்தமிழ் நாட்டுக்கு ஒரு கல்வி மலராய், ஓர் அறிவு விளக்காய், ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 13 ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றாவனாற் கவரப்பட்டது ஒரு பெருங் கொடுமையன்றோ? இச் சென்னை மாநகரில் வட பகுதிக்கு மணி. திருநாவுக்கரசு முதலியாரும் இதன் தன்பகுதிக்குத் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் ருபெருங் கண்களாய்த் திகழா நின்றனர்; அவற்றுள் ஒரு கண்ணை இழந்து இப்போதிது துயர் கூர்ந்து நிற்கலாயிற்றே! ஞாயிறு திங்கள் என்னும் என்னும் இரண்டில் ஒன்று அழிந்து

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/111&oldid=1585703" இலிருந்து மீள்விக்கப்பட்டது