உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

77

செய்யுட்களுக்கும், பொருள்வணக்கம் எட்டுச் செய்யுட் களுக்கும் எழுதிய விரிவுரைகளும், 'குறிஞ்சிப் பாட்டைப்’ பற்றி எழுதிய உரையும், ‘அன்பு,' ‘அருள் ‘என்பவற்றைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் ஆங்கிலத்தினின்று மொழி பெயர்த்து வரைந்த நான்கு செய்யுட்களும் ‘மூன்றுகனவு' என்பதும் வேறு சில குறிப்புகளும் அப்போது இவரால் இயற்றப் பட்டு, அச் 'சித்தாந்ததீபிகை' முதல் மூன்றிலக் கங்களில் வெளிப்படுத்தப் பட்டன வாகும். மேற்குறித்த நூல்களுக்கு இவரெழுதிய விரிவுரைகளும், மற்றைக் கட்டுரைகளும், மறைமலையடிகள் புத்திளமைக் காலத்திலேயே எய்திய அரும் பெறற் கல்விப் புலமை யினையும் ஆழ்ந்த அறிவின் றிறத்தையும் விளங்கக் காட்டும் பேரடையாளங்களாய் நிற்கின்றன. இவ்வளவும் இவர் சிற்றூர்க்குச் சென்றவரை நிகழ்ந்த வரலாறாம். இத்துணையே இந்நூலின் உரைக்குறிப்புகளுக்கு வேண்டுவ தாகையால், மேல்நிகழ்ந்த விடுகின்றாம்.

ம்

வரது வரலாற்றினை ஈண்டுக் கூறாது

இவர் சிற்றூரிற் சென்றிருந்தபோது இவர்க்கு ஆண்டு இருபது நிரம்பி ஒன்பது திங்கள் மேல் ஆயின. ஆகையாற் கட்டுரையில் இருபதாண் டென்றது ஒரு குத்து மதிப்பேயாம்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/110&oldid=1585702" இலிருந்து மீள்விக்கப்பட்டது