உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இனி

மறைமலையம் 19

நாயகரவர்கள்

‘முதற்குறள் வாதம்' எனப் பெயரிய ஒரு புத்தகம் எழுதி விடுப்ப, இவர் அதற்கு மறுப்பாக ‘முதற்குறள்வாத நிராகரணம்’ எனப் பெயர் அமைத்த நூலொன்றை வெளியிட்டார். இவ்வளவும் இவர் நாகபட்டினத்திலிருந்த ஞான்று எழுதியவைகளாகும். அப்போதிவர்க்கு ஆண்டு இருபதரை. வரை நாகையிற் கண்டு அளவளாவிச் சென்றதுமுதல் இவரைச் சென்னைக்கு வருவிப்பதிற் கருத்து மிகலானர். அஞ்ஞான்றுதான், நாயகரவர்கள்பாற் சைவசித்தாந்தமுணர்ந்த திரு. நல்ல சாமிப்பிள்ளை என்பவர் சிவஞானபோதம்' என்னும் ஒப்புயர்வற்ற விழுமிய சைவசித்தாந்த முதல் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினர். அதனை வெளிப்படுத்தியபின், சைவசித்தாந்த உண்மைகளை நன்கு பரவச்செய்தற் பொருட்டு அவர் 'சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம்' எனப் எனப் பெயர்வாய்ந்த ஒரு திங்கள் தழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தக் கருதி. அதனைத் தம்மோடு உடனிருந்து நடத்தத்தக்கார் எவர் என்று ஆராய்கையில், நாயகரவர்கள் இவரே வரே அது

சய்யவல்லார்’ என்று மறைமலையடிகளைச் சுட்டிக்காட்டி, இவரைத் தம்பாற் சென்னைக்கு வருவித்தனர். அப்போது நல்லசாமிப் பிள்ளை யென்பார் சிற்றூரில் வழக்குத் தீர்க்கும் மன்றத்தில் நடுவராய் அலுவல் பார்த்து வந்தனர். அவர் நாயகரவர்கள் கட்டளைப்படி உடனே சென்னைக்கு வந்து இவருடைய கல்வியறிவினையும் இயற்கையறிவினையுந் தாமும் ஆராய்ந்து பார்த்து வியந்து, தம்மோடு இவரைச் சிற்றூர்க்கு அழைத்துச் சென்றனர். இவரது உதவிகொண்டு, 'சித்தாந்த தீபிகை' எனப் பெயரிய திங்கள் இதழ் தமிழ்ப் பதிப்பின் முதல்இலக்கம் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21 ஆம் நாள் வெளிப்படுத்தப்பட்டது. அதன் முதல் ஐந்து இலக்கங்களுக்கே இவர் ஆசிரியராயிருந்து எழுதிவந்தனர். ‘திருமந்திரத்' திலுள்ள அன்புடைமை, இரந்தார்க்கீதல், அறஞ்செயான்றிதம் என்னும் மூன்றியல் முப்பது பாட்டு களுக்கும்; 'சிவஞான சித்தியார் அளவையில் காப்புச் செய்யுளோடு பதினான்கு செய்யுட்களுக்கும்; 'தாயுமான சுவாமிகள் பாடல்' பரிபூரணானந்த போதம் பத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/109&oldid=1585701" இலிருந்து மீள்விக்கப்பட்டது