உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

75

நண்பருமான திரு. மதுரைநாயகம் பிள்ளை யென்பவர் அடிகளின் வரலாறுகளை நாயகரவர்கட்கு உடனே எழுதித் தரிவித்தனர். நாயகரவர்களும் அடிகளைப் பார்க்கும் விருப்பம்மிக்குத், தாம் அடுத்து நாகைக்கு வருகையில், இவரைத் தம்பால் அழைத்துவரும்படி அவர்க்கு அறிவித்தார். அறிவித்த சில திங்களிலெல்லாம் நாயகரவர்கள் வெளிப் பாளையம் வர இவரும் அவரைச் சென்று கண்டார். நாயக ரவர்கள் இவரை யாராய்ந்து பார்த்து இவரைத் தம் புதல்வர் போற் கருதி அன்பு பாராட்டி வரலானர். நாயகரவர்கள் சென்னைக்குத் திரும்புங் காலையில்; “உன்னை விரைவிற் சென்னைக்கு வருவிப்போம்; நீ அந்தப் பக்கங்களில் இருந் தாற்றான் நலமுண்டாம்” என்று இவரை நோக்கிக் கூறிச் சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபின்னர் இவர்க்கு அன்பான கடிதங்கள் எழுதிவர இவரும் அவரைத் தம் ஆசிரியருந் தந்தையும்போல் எண்ணி அவர்பால் மிகுந்த அன்புபூண்டு கடிதங்கள் எழுதி வரலானர்.

இந்நாட்களின் இடையில், நாயகரவர்கள் இவர்க்குள்ள சைவசித்தாந்த நுட்பறிவைப் பயன்படுத்தக் கருதிச், சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச்செய்த துகளறுபோதம் என்னும் நூலை இவர்பால் விடுத்து, அதற்கோர் உரை யெழுதுமாறு தூண்டினர். அதற்கிசைந்து இவர் அந்நூலின் நூறு செய்யுட்களுக்கும் விழுமியவோர் அருந்தமிழுரை வரைந்து அதனை நாயகரவர்கள்பாற் போக்க, அவர்கள் அவ்வுரையின் நுட்பத்தையுஞ், சித்தாந்தத் தெளிவையும், சொற்சுவை பொருட்சுவைகளையும் உற்றுநோக்கி, "இவ்வுரை சிவஞான முனிவர் உரையோடு ஒப்பது" என்று வியந்து பேசி, அதனைத் தமது செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தி னார்கள். இவர் அக்காலத்தே மாயாவாத மறுப்பாக 'நாகை நீலலோசனி' யில் எழுதின கட்டுரைகளிற் சில, நாயகரவர்கள் செலவில் இவர் 1899 ஆம் ஆண்டு வெளியிட்ட 'சித்தாந்த ஞானபோதம்' முதற்புத்தகத்தின் 120 ஆம் பக்கம் முதல் அதன் முடிவுவரையில் அச்சிடப்பட்டிருக் கின்றன. இன்னும் அக்காலத்தே சென்னையிலிருந்த மாயாவாதி ஒருவர், தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த ‘திருக்குறளின்’ முதற் சய்யுளை மாயாவாதக் காள்கை யின்பாற்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/108&oldid=1585700" இலிருந்து மீள்விக்கப்பட்டது