உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 19

அருமையை மிகவும் வியந்து பேசினர். அவ்அவையிற் குழுமியிருந்த பெருங்கூட்டத்தவர் எல்லாரும் அதனைப் பெரிதும் பாராட்டினர். அப்போது இவர்க்கு ஆண்டு இருபது. அவ்வாண்டின் கடைசியில் இவர் நாகைக்குத் திரும்பினர்.

இதற்குமுன் இவர் நாகையிற் கல்வி பயின்று வருங் காலத்தில், நாகை வ ளிப்பாளையஞ் சைவசித்தாந்த சபையார், சைவப் பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சென்னையினின்றும் இடையிடையே வருவித்து அவராற் சித்தாந்த அரும்பொருள் விரிவுரைகள் நடப்பித்து வந்தனர். நாயகரவர்கள் நிகழ்த்திய அவ்விரிவுரைகள் இளைஞரா யிருந்த மறைமலையடிகள் ஆவலோடுஞ் சென்று கேட்டு அப்பொருள்கள் முழுமையுங் கேட்டபடியே மனத்தமைத்துச் சைவசித்தாந்த வுண்மை தெளிந்து, அதற்குமுன் தாம் பயின்றுவந்த 'மாயாவாத வேதாந்தம்' பொருந்தாமை கண்டு, அதனை அறவே கைவிட்டுச், சைவசித்தாந்த வுண்மைக்கே உழைக்குங் கடப்பாடு மேற்கொண்டு அதன்கண் விருப்பம் மீதூரப் பெற்றார். அவ்வாண்டில் நாகையில் நடைபெற்ற 'ஸஜ்ஜனப் பத்திரிகா' என்னுங் கிழமைத்தாள் ஒன்றில் L மாயாவாதி ஒருவர், திரு. நாயகரவர்கள் எழுதிய சிலவற்றை மறுத்து எழுதி வந்தார். அம் மறுப்பினைக்கண்ட மறைமலை யடிகள், நாயகரவர்கள் எழுதியவைகளே பொருத்தமுடை யனவாதலும், அம் மாயாவாதி எழுதியவை பொருத்த மிலவாதலும் நன்கெடுத்துக்காட்டி 'நாகை நீலலோ சனி'யில் தொடர்பாகப் பல கட்டுரைகள் வரைந்து, 'முருகவேள்' என்று கைச்சாத்திட்டு வெளியிட்டார். அக்கட்டுரைகளை நோக்கினாரெல்லாம் அவை தம்மை வரைந்த இவர்தம் ஆராய்ச்சி யறிவின் திறத்தையுங் கல்வியறிவின் ஆழத்தையுங் கட்டுரை எழுதும் ஆற்றலையும் மிகுதியும் வியந்து

கொண்டாடினர். இக்கட்டுரைகளைச் சென்னையிலிருந்த நாயகரவர்கள் பார்க்க நேர்ந்த போது, அவற்றின் திறத்தை வியந்து அவற்றை வரைந்த 'முருகவேள்' என்பார் யார்? என்று நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையார்க்கு ஒருகடிதம் எழுதிக் கேட்டனர். அச்சபையாருட் பெருமுயற்சி யுடையவரும், மறைமலையடிகட்கு இளமைதொட்டுச் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/107&oldid=1585699" இலிருந்து மீள்விக்கப்பட்டது