உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

அறிவுரைக்கோவை

பிள்ளையவர்களோடு

73

எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியவராகக் கருதியிருந்த சுந்தரம் பிள்ளையவர்கள இவர் மிக இளைஞரா யிருத்தலை நேரிற் கண்டவளவானே பெரிதும் வியப்புற்றுத் தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் அளவளாவி யிருக்கையில் இவர் வர் 'தொல்காப்பியம்', 'பத்துப்பாட்டு' கலித்தொகை' முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலுஞ் 'சிலப்பதிகாரம்' 'சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத்தலை ஆராய்ந்து பார்த்து 'இத்துணைச் சிறு பொழுதிலே இத்துணையுயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது' எனப்புகன்று அங்ஙனந் தாம் பாராட்டியதற்கு அடையாள மாக ஒரு நற்சான்று இதழும் எழுதித் தந்தனர்.

ம்

திரும்பவும் 1896 ஆம் ஆண்டில் சுந்தரம் பிள்ளை யவர்கள் இவரைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்து அப்போது மார்த்தாண்டன் தம்பி என்பவரால் வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆங்கிலக் கல்விக் கழகத்தில் இவரைத் தமிழாசிரியராக அமர்த்தி வைத்தனர். திருவனந்தபுர நகரம் அக்காலத்தில் உடம்பின் நலம் பேணுதற்கேற்ற ஒழுங்குகள் அமையப்பெறா திருந்தமையால் இரண்டரைத் திங்கள் மட்டுமே இவர் அங்கிருந்து, பின்னர் அவ்வலுவலைவிட்டு நாகபட்டினந் திரும்பினர். இவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரைத் திங்களும், அந்நகரத்துச் சைவர்கள் வைத்து நடத்திய சைவசித்தாந்த சபைகளிரண்டிற் 'சைவ சித்தாந்த உண்மைகளைப்' பற்றிய விரிவுரைகளை இடையிடையே நிகழ்த்தி வந்தனர். இவர் செய்த அவ்விரிவுரைகள் அந்நகரத் திருந்த சைவ நன்மக்களாற் பெரிதுங் கொண்டாடப்பட்டன. அப்போது திருவனந்தபுரம் அரசர்கல்லூரியில் நாடகத் தமிழைப் பற்றி ஒரு விரிவுரை விரிவுரை செய்யும்படி சுந்தரம் பிள்ளையவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கிசைந்து 1896 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 12 ஆம் நாள்

இவர் நாடகத்தமிழ்' என்பதனைப் பொருளாகக் கொண்டு, மிக ஆராய்ந்து கண்டதோர் அரிய விரிவுரையினை நிகழ்த்தினர். அவ்விரிவுரை நிகழ்ந்த அவையில் சுந்தரம் பிள்ளையவர்களே அவைத் தலைவராயிருந்தது, இவர் செய்த விரிவுரையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/106&oldid=1585698" இலிருந்து மீள்விக்கப்பட்டது