உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் 19

வறுமையின்றிச் செலுத்திக்கொள்ள வாய்த்தது முதற்றான், கட்டுரைகள் எழுதும் பழக்கத்தையுங் கைக்கொள்ளலானர். தமது குடும்பச் சுமை முற்றும் இவரே தாங்க வேண்டி யிருந்தமையானும், அச்சுமையை எளிதாக்குதற் கேற்ற செல்வ வளம் இல்லாமையாலுங் குடும்ப வாழ்க்கையை இனிதாக்கு தற்கு வேண்டும் பொருள் வருவாயை நோக்கியே, இவர் திங்கள் இதழ் கிழமை இதழ் நாளிதழ்கட்குக் கட்டுரை யெழுதவும் பள்ளிக் கூடங்கட்குப் பாடப்புத்தங்கள் இயற்றவும் வேண்டிய வரானர். பொருள் வருவாயை நோக்கி எழுதப்படும் எதுவும் பெரும்பாலும் நிலையான பயனைத் தரத்தக்க தாகாது. இதனை நமது தமிழ்நாட்டுச் செல்வர்கள் உணர்ந்து பார்த்து, நூல் எழுதும் ஆற்றல் வாய்ந்த தமிழறிஞர்க்கு வறுமை தீரப் பொருளுதவி செய்திருப்பார் களாயின், துகாறும் எத்தனையோ அருந்தமிழ் நூல்கள் பேரறிஞர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும். ஆனால், அச் செல்வர்கள் தமது பெரும்பொருளைப் பயனற்ற தீவினையைப் பெருக்கத் தக்க ஆரவாரமான வழிகளிற் பாழாக்குகின்றனரே யன்றித், தமிழ்மொழியை வளம்படுத்தி வளர்க்குந் துறைகளிற் சிறிதும் பயன்படுத்துகின்றிலர்! மேல் நாட்டவரிற் கற்றவர் தொகையும், அக் கற்றவரால் அரும்பெரும் பொருள் பொதிந்து இயற்றி வெளியிடப்படும் நூல்களின் தொகையும் நாடோறும் பதினாயிரக் கணக்காய்ப் பெருகி வருதலையும், தமிழ் நாட்டவரின் நன்கு கற்ற மிகச் சிலரின் தொகையும் வறுமையால் நாளுக்கு நாள் அருகி வருதலையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்குங்கால், இத் தமிழ் நாட்டவர் எந்த வகையில் முன்னேற்றம் அடையப் போகின்றார்கள் என்னுந் திகில் பெரிதாயிருக்கின்றது; நகைக்குந் துணிக்கும் வீணான வெளிமினுக்குகளுக்கும் வெற்றார வாரங்களுக்கும் இத்தமிழ் நாட்டிற் கணக்கின்றிச் செலவாகும் பொருளையுங், கல்விக்குங் கைத்தொழிலுக்கும் புதிய புதிய ஆராய்ச்சிகளுக்குஞ் சமய அறிவு வளர்ச்சிக்கும் மேனாட்டிற் பயன்படுத்தப்படும் அளவற்ற பொருளையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்குங்கால், இந்நாட்டவர் மேல் நாட்டவரோ டொப்ப நாகரிக இன்ப அறிவு வாழ்க்கையைப் பெறுதல் கனவிலுங் கைகூடுமோ என்று வருந்தி ஏங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/115&oldid=1585707" இலிருந்து மீள்விக்கப்பட்டது