உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

83

வேண்டியதாயிருக்கின்றது! இந் நாட்டில் வீணாகச் செலவழியும் பெரும்பொருட்டிரள் நூறு கோடியில் ஒரு சிறு பங்காயினுந் தமிழ் கற்றார்க்குப் பயன்படுமாறு வைக்கப்படு L மானால் நம் திருநாவுக்கரசை யொத்த எத்தனையோ தமிழ்ப் புதல்வர்கள் தமிழறிவிற் சிறந்து, எத்தனையோ அரும்பெருந் தமிழ் நூல்களை இயற்றி வெளியிட்டிருப்பார்கள்! திருநாவுக்கரசும் இவரைப் போன்ற வேறு சிலரும் அரிய பெரிய தமிழ் நூல்கள் எழுதாமைக்குக் காரணம், அவரது வாழ்க்கை இனிது நடத்தற்குப் போதுமான பொருள் வருவாய் இல்லாமையே யன்றே? ஐயகோ! தமிழறிஞர்க்குள்ள வறுமை எஞ்ஞான்று எங்ஙனம் நீங்கப் போகின்றது நம் அருமைக் கண்மணிகளாம் தமிழிளைஞர் சிலரையும் நாம் இங்ஙனம் விரைவில் இழக்க நேர்வது பெரும்பாலும் அவர்க்குள்ள குடும்பக் கவலையினாலன்றே? இது நிற்க.

இனி இவருடைய அறிவு ஆராய்ச்சி நல்லியல் புகளைப் பற்றிச் சிறிது கூறல் வேண்டும்: இவர் இயற்கை யிலேயே கூர்த்த அறிவுடையவர்; தாம் ஒன்று கற்றாற் பின்னர் அதனை நூறாகப் பெருக்கி விடுவர்; அதனைப் பிறர்க்கு விளக்கிச் சொல்லுதலிலும் வல்லர்; அங்ஙனம் விளக்குதற்கு வேண்டிய பலவற்றைப் பல துறைகளிலிருந்தும் புதியவாக எடுத்துச் சேர்த்துக் கொள்வர். குடும்பச் சுமையும் மிகுதியான செலவும் இவற்றின் பொருட்டு ஓயாமற் பொருளீட்டும் முயற்சியும் ல்லா திருந்தால், உணவை ஒழுங்குபடுத்தி நோய்க்கு இடமானவைகளை விலக்கித் தமதறிவையும் முறற்சியையும் ருமுகப்படுத்தியிருந்தால், தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள ன்னும் எத்தனையோ அரும்பெரு நூல்களை யெல்லாம் ஆழமாகப் பயின்று, அப்பயிற்சியாலாய பெரும் பயனை இவர் இத் தமிழுலகுக்குத் தந்திருக்கலாம். ஆழ்ந்தகன்ற நூல்களைப் பயின்று அவற்றின் பொருள்களைப் பயன் படுத்தத்தக்க அத்துணைச் சிறந்த இயற்கை யறிவு இவர்க்கு அமைந்திருந்தது. ஆனால், அது பயன்றராமல் இத்துணை விரைவில் மறைந்து போயிற்றே!

இவர் எம்பாற் கல்வி பயின்று வளியேறிச்

சொற்பொழிவுகள் நிகழ்த்துகின்ற காலையில், இவரது அறிவானது ஆராய்ச்சி முறையிற் சென்று, தாம் கற்றவற்றிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/116&oldid=1585708" இலிருந்து மீள்விக்கப்பட்டது