உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 19

பொருந்துவன இவை, பொருந்தாதன இவை எனக் காணும் நீர்மையதா யிருக்கவில்லை. தம் முன்னாசிரியராகிய பூவை கலியாணசுந்தர அடிகள் கொண்டிருந்த ஆரியப் பற்றிலேயே

6

வர்க்குப் பிடிமானம் மிகுதியாயிருந்தது. எம்முடைய ஆராய்ச்சித்துறைகளிலும், யாம் ஆராய்ந்து கட்டிய முடிபுகளிலும் நீண்ட காலம் வரையிற் பிடிமானம் இல்லாமலே இருந்தார். ஆசிரியர் மெய் கண்டதேவர் அருளிச் செய்த’ 'சிவஞானபோதம்' தமிழ் முதல் நூலே யன்றி வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துச் செய்ததன்று என யாம் ஆராய்ந்துரைத்த முடிவைத் தழுவாமல், அது மொழிபெயர்ப்பு நூலேயென்று எழுதியும் பேசியும் வந்தார். எழுதும்போதும் பேசும் போதுந் தமிழ் மொழியைப் பிறசொல் கலப்பின்றித் தனித் தூய தமிழாகவே வழங்க வேண்டுமென்று யாம் வற்புறுத்தி வருங்கொள்கையில் நீண்ட காலம் வரையில் உடம்பாடில்லாமலே யிருந்தார். 'வேதம்' என்றும் ‘ஆகமம் என்றும் வடமொழியில் வழங்கும் நூல்கள் இறைவன் அருளிச் செய்தனவல்ல என்று யாம் ஆராய்ந் துரைத்த முடிபிற் கருத்தொருப்பா டில்லாமலே யிருந்தார். இன்னும் இங்ஙனமே நூலாராய்ச்சித் துறைகளிலுஞ் சீர்திருத்த முறைகளிலும் யாம் ஆராய்ந்து கொண்ட கோட்பாடுகளில் இவர் உடன்பாடுரையராய் நில்லாமற் றம் முன்னாசிரியராகிய கலியாண சுந்தர அடிகள் சென்ற வழியே சென்றார். என்றாலும் இவர் எம்மிடத்து வைத்த பேரன்பிலும் பெரும் பாராட்டிலுஞ் சிறிதும் பிறழ்ந்தவர் அல்லர். அதனால் எமக்கும் இவர்பாலுள்ள அன்பு சிறிதும் பிறழ்ந்திலது கருத்து வேறுபாடு பற்றி அன்பு சிதையாமலும் பகைமை கொள்ளாமலும் எம்மோடு என்றும் ஒரு நீர்மையராய் ஒழுகிய இவரது சிறந்த உள்ள மேம்பாடானது, கருத்து வேற்றுமை குறித்து அன்பின்றி ஒருவரையொருவர் பகைக்குந் தமிழ்ப் புலவர்க்கும் பிறர்க்கும் அறிவு தெருட்டும் அருமணி விளக்கமாய் நிற்கற்பாலது.

யாம் சென்ற ஆராய்ச்சித் துறையிலுஞ் சீர்திருத்த முறையிலும் இவர் முன்னமே எம்மோடு ஒத்து நின்று உதவி புரிந்திருந்தனராயின், இத்தமிழ் நாட்டில் இன்னும் எவ்வளவோ நலங்கள் விளைந்திருக்கும். எம் சைவசமயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/117&oldid=1585709" இலிருந்து மீள்விக்கப்பட்டது