உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

85

சிரியர் தமிழாசிரியர் செய்து வைத்த சீர்திருத்தங்களையே யாம் இருபத்தைந் தாண்டுகளுக்கு முன்னமேதொட்டு எம்முடைய நூல்களாலும் எம்முடைய விரிவுரைகளாலும் ஆங்காங்கு விளக்கி வருகின்றோம். இற்றைக்கு மூன்றாண்டு களுக்கு முன் புதிது தோன்றிய சீர்திருத்தக்காரரது இயக்க மானது உம்முடைய கோட்பாடுகளையே தழுவி யெழுந்த தாயினும், இடைக்காலத்தே எம் சைவ ஆசிரியருக்கு மாறாய்த் திரும்பிச் சைவ சித்தாந்தத்துக்கு உடம்பாடாகாத பௌராணிக சைவர்’ தம் பொருந்தாக் கூற்றுக்களை எடுத்துக் கொண்டு சிவ பிரானையுஞ் சிவனடியார்களையுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் இழித்துப் பேசுவதாயிற்று. அவ்வாறு சைவ சித்தாந்தத்தின்மேல் ஏற்றப்பட்ட பழிகளைக் களைந்து, சைவசித்தாந்த உண்மையினை நாட்டி, அப்புதிய இயக்கத்தாருடன் யாம் போராடிய காலத்தும் யாம் தனி நின்றே அதனைச் செய்யு நிலையிலிருந்தேம். புதிய இயக்கத்தார் நிகழ்த்துந் தடைகட்கு விடை கூறமாட்டாத பௌராணிக சைவர் அவரை யெதிர்ப்பது விடுத்துச் சைவ சித்தாந்த உண்மையினை நாட்டும் எம்மையே எதிர்க் கலாயினர். ஒரு பக்கத்திற் புதிய இயக்கத்தாரும் மற்றொரு பக்கத்திற் பௌராணிகசைவருந் தாக்க, அந்நேரத்தில் யாம் சிவபிரான்றுணையொன்றே கொண்டு, அவ்விருவர்க்கும் ஈடு கொடுத்துச் சைவ சித்தாந்த உண்மையினைத் தனி நின்றே நாட்டும் நிலையினம் ஆனேம். அந்நேரத்தில் நம் அருமைத் திருநாவுக்கரசு நம்முடன் சேர்ந்து நின்று சமயத் தொண்டு செய்திருந்தனராயின் இன்னும் எவ்வளவோ நலங்கள் விளைந்திருக்கும்.

ஆனாலும், அப்போராட்டந் துவங்கிய இரண்டோ ராண்டுக்குப் பிற் சடுதியில் திருநாவுக்கரசின்பாற் றோன்றிய ஒரு முழு மாறுதலானது எமக்குப் பெருவியப்பினையும் பெருமகிழ்ச்சியினையும் பயந்தது. பாழ்ங்கொள்கையையே விடாப்பிடியாய்க் கொண்ட புதிய இயக்கமும் அவர்க்குப் பழுதாகத் தோன்றலாயிற்று; முழுமுதற் கடவுளான எல்லாம் வல்ல சிவத்தினிலக் கணத்துக்கும், அதனை அறிவுறுத்துஞ் சைவசித்தாந்தத் துக்கும், அதனைத் தனக்கேயுடைய தெய்வத் தமிழுக்குஞ், சைவ ஆசிரியர் மேற்கொண்ட சீர்திருத்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/118&oldid=1585710" இலிருந்து மீள்விக்கப்பட்டது