உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

86

மறைமலையம் -19

சைவக்

துறைகட்கும் முற்றும் முரணான பௌராணிக கோட்பாடும் அவர்க்குப் பழுதாகத் தோன்றலாயிற்று. ங்ஙனந் தோன்றிய பின்னர்தான் ஆராய்ச்சி முறையிற் செல்லும் எமது தமிழ்த் தொண்டு சிவத்தொண்டு சிறந்தனவாகு மெனத் திருநாவுக்கரசு நன்கறிந்து, அதுமுதல் எம்முடைய கோட்பாடுகளையே முற்றுந் தழுவி நடக்கக் கங்கணங் கட்டினார். எமது திருத்தொண்டினால் இத் மிழகத்துக்கு விளையும் நலங்களைப் பகுத்துணர்ந்து பாராமையாற் பௌரா பளராணிக சைவரிற் பலர் எம்மைப் புறங்கூறுவாராய்ச் சிறிதுந் திருந்தாதிருக்க நம் அருமைத் திருநாவுக்கரசு உடனே எம் வழிக்குத் திரும்பிப், பழமையை யொட்டிய சீர்திருத்தத் துறையில் இறங்கியது பெரிதும் பாராட்டற்பால தொன்றாயிருந்தது. சென்ற தைத்திங்கள் பூச பூ நாளன்று பல்லாவரத்திற் கூடிய எமது பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாப் பேரவைக் குத், திருநாவுக்கரசு பலவகையில் உதவி செய்ததுடன், பௌராணிக சைவர் பெரிதும் வெருக்கொள்ளத் தக்க மிக உயர்ந்த சீர்திருத்தங் களையும் அஞ்சா ஆண்மையுடன் கொணர்ந்து, எமதும் அவையாராதும் முழு உடன்பாடு பெற்று அவைதம்மை நன்கு நிறைவேற்றி வைத்தார். இவர் இத்துணை அஞ்சா ஆண்மையினராய்த் தமிழ் மக்கள் ஆக்கத்தைக் கோரி உழைக்க முன் வந்ததானது எமக்கு அடங்கா மகிழ்ச்சியினை விளைவித்தது. ஆனாலும், இவர் தமது ணவினை ஒழுங்குப்படுத்தாமலும், உடலோம்புந் தவவொழுக்க முறைகளைக் கைக்கொள்ளாமலும் இத்துணை விரைவில் தமதுடம்பை நீத்து ஏகியது பெருந்துயரத்தைத் தருகின்றதே! ஆ! ஊழ்வினையின் வலிவை என்னென்பேம்!

நினைக்குந்தோறும்

இனி, இவர்தம் நல்லியல்புகளைப் பற்றிச் சிறிது கூறல் வேண்டும். எவருந் தாம் நல்ல தொன்று செய்தால் அதனை எங்கும் பறையறைந்தாலென வெளிப்படுத்துவர்; நல்ல தல்லாதது செய்தால் அதனைத் தமக்குற்றார்க்குந் தெரிவியார். மற்றுத் திருநாவுக்கரசோ தாம் செய்த நன்மையைத் தெரிவியார்; தாம் நல்ல தல்லாதது ஏதேனுஞ் செய்தால் அதனைத் தெரிவியாதிரார். பிறர்க்குத் துன்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/119&oldid=1585711" இலிருந்து மீள்விக்கப்பட்டது